மேலும் அறிய
Crime : குடித்துவிட்டு வந்த மாணவன்.. தட்டிக்கேட்ட அண்ணன்.. தலைமையாசிரியர் வீட்டில் நடந்த பயங்கரம்..
குடித்துவிட்டு வந்ததை தட்டி கேட்ட உடன் பிறந்த அண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி.

குற்றம் - தொகுப்பு
தமிழகம் முழுவதும் சில மாதங்களாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி வருவது தொடர் கதைத் ஆகி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அடுத்துள்ள திருவேங்கடம் அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர், பால் பிரபு தாஸ். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவருடைய மனைவி செல்வராணி சின்ன காஞ்சிபுரம் சிஎஸ்சி மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய முதல் மகன் வின்சென்ட் ஜான் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய இளைய மகன் பச்சையப்பன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகன் போதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.

நேற்று இளைய மகன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் குடித்துவிட்டு வந்ததை தட்டி கேட்ட அம்மாவை தாக்கியுள்ளார். அம்மாவை தாக்கியதால், அவருடைய அண்ணன் வின்சன் ஜான் தட்டி கேட்டு உள்ளார். இதனால் இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது . ஒரு கட்டத்தில் மது போதையில் இருந்த தம்பி, வீட்டு சமையல் அறையில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து அண்ணன் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். மார்பு பகுதியில் கத்தியை வைத்து ஆழமாக குத்தியதால், சம்பவ இடத்திலேயே அண்ணன் வில்சன் ஜான் துடிதுடித்து உயிரிழந்து உள்ளார்.
இதை அடுத்து அவருடைய தாயார் மற்றும் தம்பி இருவரும் அண்ணனுடைய உடலை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். கீழே தடுக்கி விழுந்ததில் எதிர்பாராத விதமாக சமையல் அறையில், இருந்த கத்தி குத்தி விட்டதாகவும் கூறி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ,இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் இறந்தவர் கத்திக்குத்தால் இறந்திருப்பதால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து போலீசார் மருத்துவமனை மற்றும் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, மது போதையில் வந்த தம்பியை, தட்டி கேட்ட அண்ணனை கொலை செய்ததும், இதனை மறைப்பதற்கு கீழே தடுக்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















