விநாயகர் சதுர்த்தி கொண்டாட மின் மோட்டார் திருட்டு: 4 பேர் கைது!
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மின் மோட்டாரை திருடி விற்பனை செய்ய முயற்சி செய்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தை சார்ந்தவர் குப்புசாமி. இவருக்கு சொந்தமான நிலம் குன்னத்தூரில் இருக்கிறது. இந்த நிலத்தில் மின் மோட்டருடன் கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி குன்னத்தூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாட, அதே கிராமத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர் ராஜ்குமார், அவரின் நண்பர் காளிமுத்து மற்றும் சிறுவர்கள் 2 பேர் என 4 பேர் மொத்தமாக முடிவெடுத்துள்ளனர்.
Journalist Thuglak Ramesh Interview: உதயநிதி என்ன MGR ஆ? எதற்கு இவ்வளவு புகழணும்?
இதனையடுத்து, அவர்களிடம் போதிய பணம் இல்லாத நிலையில், கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்தின் இரண்டு மின் மோட்டார்களை திருடி, உளுந்தூர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் இரும்பு கடையில் விற்பனை செய்ய கொண்டு சென்றுள்ளனர். அப்போது, திருவெண்ணைநல்லூர் அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில், காவல் துறையினர் இவர்களின் வாகனத்தையும் சோதனை செய்துள்ளனர்.
TN Assembly : பெரியார் பிறந்தநாள் - சமூக நீதி நாள்.. ஸ்டாலின் அறிவிப்பு!
போலீசார் வாகன சோதனையில் மின் மோட்டார் இருப்பது தெரியவந்தது, மேலும் இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்களின் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட மின் மோட்டார், திருடி வந்தது தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணையின் போது 4 பெரும் ஒருவருக்கொருவர் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததால், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். விசாரணையில் மின் மோட்டார் திருடி வந்த உண்மை உறுதியானது.
மேலும் இது குறித்து போலீஸார் தொடர் விசாரணையில் இளைஞர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது; அவர்கள் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஊரில் பெரிய சிலை வைப்பதற்காக போதிய பணம் இல்லாத காரணத்தால் மின் மோட்டார்களை திருடி இரும்பு கடையில் எடைக்குப் போட்டு அதில் வரும் பணத்தை கொண்டு விநாயகர் சிலை வாங்கி வைத்து கொண்டாடலாம் என்கின்ற எண்ணத்தோடு தான் தாங்கள் திருடியதாக தெரிவித்தனர்
பின்னர் போலீசார் இவர்களில் ராஜ்குமார் மற்றும் காளிமுத்து ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறார்கள் இருவரும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.