மனைவி கொலையில் தலைமறைவாக இருந்தவர்; வடமாநில பெண்ணை வன்கொடுமை செய்து சிக்கினார்!
திருக்கோவிலூர் அருகே வடமாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயன்ற மாஜி கொலைக்காரன், கையும் களவுமாக பிடிபட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நரிப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் வெளியே தலை மற்றும் முகத்தில் ரத்த காயத்துடன் மயங்கிய நிலையில் இருந்த பெண்மணியை அங்கிருந்த பொதுமக்கள் விசாரித்த பொது இந்தியில் பேசியதால் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது அங்கு சிகிச்சை அளித்த பின் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணை நடத்தியதில் அப்பெண் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பெண் என்றும், பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததாக தெரியவந்தது. கம்பெனியில் அவருடன் வேலைபார்க்கும் 2 நபர்கள் அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். நீண்ட நாட்கள் ஆகியும் கடன் திருப்பித் தரவில்லை. பின்னர் கடன் வாங்கியவரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர்கள் தலைமறைவானதும், தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் இருப்பதாக அந்த பெண்ணுக்கு தகவல் கிடைத்தது. உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த கப்பல்துரை என்பவர், அவர்களிடம் அறிமுகமாகி, தனக்கு அவர்களின் இருப்பிடம் தெரியம் எனக்கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் இருந்து ஒரு லாரி மூலம் திருக்கோவிலூருக்கு புறப்பட்டனர். உளுந்தூர்பேட்டை வந்ததும், இந்த நேரத்தில் இங்கு வாகனங்கள் எதுவும் வராது எனக்கூறியதுடன், தனது வீட்டில் தங்கிவிட்டு காலையில் புறப்படுமாறு கூறி அழைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணும் அதை நம்பி அங்கு சென்றுள்ளனர். அழைத்துச் சென்ற பின், அந்த வடமாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் மீண்டும் வன்கொடுமை செய்ய முயன்றபோது அந்த பெண் மறுத்துள்ளார் . இதனால் ஆத்திரம் அடைந்த கப்பல்துரை, பெண்ணின் தலையை பிடித்து அருகில் இருந்த கல்மீது ஓங்கி அடித்துள்ளார் . இதனால் படுகாயம் அடைந்த அந்த பெண் மயங்கியதும் கப்பல்துரை அங்கிருந்து தப்பித்துவிட்டார்.
பின்னர் மயக்கம் தெளிந்த அந்த பெண் அங்கிருந்து கரும்பு தோட்டம் வழியாக நடந்து அருகில் உள்ள கோவிலுக்கு அருகே மயங்கி விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து கப்பல்துரையை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கப்பல்துரை பெங்களூருக்கு தப்பி சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். தற்போது அவர் வடமாநில பெண்ணை வன்கொடுமை செய்து தாக்கிய சம்பவத்தில் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். மேலும் கப்பல்துரை மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் ,பெண் மீது தாக்குதல் வன்கொடுமை ஆகிய குற்றவழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.