மேலும் அறிய

Law Student Attacked | "நிர்வாணமாய் நிற்கவெச்சு அடிச்சாங்க.. அன்னைக்கே செத்துட்டேன்” - பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்..

" என்னை நிர்வாணமாக நிற்க வைத்து போலீசார் அடித்த பொழுதே நான் இறந்துவிட்டேன்" எனக்கு இப்போது தேவை நீதி மட்டுமே என தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர், முகக்கவசம் அணியாமல் வந்த குற்றத்துக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் போலீசாரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் காவல் நிலையத்தில் வைத்து தான் தாக்கப்பட்டதாக ரஹீம், போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு போலீஸ் ஏட்டு பூமிநாதன், போலீஸ்காரர் உத்தரகுமார் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டதுடன் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
 
Chennai: Case registered Against 9 policein  Kodungaiyur Law student attack case
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவருடன் விகடன் இணையதளத்திற்கு பத்திரிக்கையாளர் ஜீவபாரதி நடத்திய நேர்காணலில் பல அதிர்ச்சித் தகவல்களை சட்டக்கல்லூரி மாணவர் பகிர்ந்துள்ளார். சட்டக் கல்லூரி மாணவர் பேசுகையில், ”வழக்கமாக ஃபார்மசியில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன் .  காவல்துறையினர் என்னை மடக்கிய பொழுது நான்  முறையாக மாஸ்க் அணிந்து இருந்தேன். இருந்தும்  அபராதம் கட்ட வேண்டும் என காவல்துறையினர் வற்புறுத்தினர்,  அப்போது அங்கிருந்த போலீஸ் இருவர் இன்றைய டார்கெட் முடியவில்லை என பேசிக்கொண்டார்கள்.
 
நான் ஒழுங்கா மாஸ்க் போட்டு இருக்குறேன் என்னால அபராதம் கட்ட முடியாதுன்னு சொல்லிட்டேன், இருந்தும் போலீஸ் கண்டிப்பா 500 ரூபாய் கட்டி ஆகணும்னு சொல்லிட்டாங்க. இதனையடுத்து அங்கிருந்த போலீஸ் என்னை வாகனத்தில் ஏற்றி கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் என் மீது வழக்கு பதிவு செய்தார்கள், எதுவும் செய்யாத என் மீது எதற்காக வழக்கு பதிவு செய்கிறீர்கள் என கேட்டேன் முறையாக காவல்துறையினர் பதிலளிக்கவில்லை. நான் தொடர்ந்து என் மீது தவறில்லை என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது,  வேறு ஒரு காவலருக்கு பதில் அளிக்க நான் திரும்பினேன், அச்சமயத்தில்  காவலர் ஒருவர் மீது , என் தோள்பட்டை இடித்துவிட்டது.  அங்கிருந்த போலீசார் என்னை அடிப்பதற்காக அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்று  தாக்கத் துவங்கினர்.
Law Student Attacked |
போலீஸ்  கைது செய்தபோது என்னுடைய சீனியர்களுக்கு தகவல் தெரிவித்தேன் , அவர்கள் வந்து பல முறை பேசினார்கள் இருந்தும் போலீஸ் என்னை விடுவதாக இல்லை.  போலீசார் இரவு 11 :30 மணிக்கு கைது செய்ததில் இருந்து மறுநாள் காலை 11 மணி வரை ஸ்டேஷனில் இருந்த எல்லா போலீசும் மாற்றி மாற்றி என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். சட்டை, பேண்ட் ஆகியவற்றை கழற்றச் சொல்லி அரை நிர்வாணமாக தொடை, கால் ,பின்புறம் என தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தார்கள்.  உனக்கு என்ன பொங்கல் வேண்டிக்கிடக்கிறது, உன்னை ஜெயிலுக்கு அனுப்புறதான் எங்களோட வேலை அப்படின்னு சொல்லி அடிச்சாங்க.
 
என் உடலில் மச்சம் என்பது இல்லை, அடையாளத்திற்கு மச்சத்தை காட்ட  சொல்லி நான் அணிந்திருந்த உள்ளாடையை கழற்றச் சொல்லி மிகக் கொடூரமான முறையில் காவலர்கள் பரிசோதனை செய்தனர். முழு நிர்வாணமாக போலீசார் நீண்ட நேரம் சோதனை செய்தது மட்டும் இல்லாமல் என்னை வைத்து கேலியும் செய்தனர். என்னை நிர்வாணமாக்கி விட்ட பிறகும் தாக்கினர். நீ எல்எல்பி படிக்கிறவன் இல்லடா நீ இப்ப அக்யூஸ்ட் அப்படின்னு மிரட்டினாங்க. ஒரு வழியாக மாலை 5:25 மணி அளவில் அங்கிருந்த போலீசார் ஒருவரிடம் கெஞ்சி என்னுடைய போன் மூலம் என் அம்மாவிற்கு தகவல் தெரிவித்தேன். இதையடுத்து இரவு 7 மணி அளவில் எனக்கு இட்லி கொடுத்து என் அம்மாவின் மூலம் சமாதானம் செய்து சாப்பிடச் சொன்னார்கள்.
Law Student Attacked |
 
சாப்பிட்டால் மீண்டும் அடிப்பார்கள் என நினைத்துக்கொண்டு நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தேன். பிறகு அம்மா கூறியதால் நானும் மயக்கத்தில் சாப்பிட அந்த இட்லியை எடுத்தபொழுது, போலீசார் ஒருவர் பூட்ஸ் காலால் தலையில் உதைத்தார். தலையிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. என்னை உதைத்த போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்று பஞ்சு கொடுத்து ஒழுங்கா தொடைச்சுக்கோன்னு மிரட்டினார். நானும் மயக்கத்தில் முடியாமல், தயவுசெய்து என்னை மருத்துவமனை கூட்டிட்டு போங்க என கெஞ்சியும் என் ரத்தத்தை என் கையால் சுத்தம் செய்யச் சொல்லி போலீசார் கொடுமைப்படுத்தினர்.
 
Law Student Attacked |
கொடுமை படுத்திய காவல்துறையினர்,  டாக்டர் கிட்ட நீயே தடுக்கி விழுந்துட்டே, சொம்பு தடுக்கிக் கீழே விழுந்துட்டன்னு சொல்லு அப்படின்னு நக்கலாக கூறினார்கள். இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் காயத்திற்கு அதிக தையல் போட வேண்டும் என  சொன்னதற்கு கம்மியா போடுங்கன்னு சொன்னாங்க, ஹாஸ்பிடல்ல பீஸ் கேட்டதுக்கு கூட போலீஸ்ன்னு சொல்லிட்டு காசு குடுக்காம வந்துட்டாங்க . அதுக்கப்புறம் என நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கு முன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவம் பாருங்கள் என்று சொன்னதை அவர்கள் கேட்கவில்லை.
 
Law Student Attacked |
இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு என்னை அழைத்து வந்த பொழுது தான் அங்கிருந்து மருத்துவரிடம் நான் அனைத்து உண்மைகளையும் கூறினேன். ஜாமின் கிடைச்சதுக்கு அப்புறம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தான் . என்னை நிர்வாணமாக்கி போலீஸ் அடித்தா  பொழுது சாத்தான்குளம் மாதிரி என்னையும் உயிரோட விடமாட்டாங்கன்னு தான் நெனச்சேன் . என்னை நிர்வாணமாக நிற்க வைத்து பரிசோதனை செய்தபோது நான் இறந்து விட்டேன் , எனக்கு இப்போ தேவையானது எல்லாம் நீதி மட்டுமே. என்னை தாக்கிய காவலர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு போடவேண்டும், அவர்களை ட்ரான்ஸ்ஃபர் செய்யாமல் வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ட்ரான்ஸ்ஃபர் செய்தால் வேற இடத்துக்குப் போகும் அப்பாவி பொதுமக்களை இப்படித்தான் அடிப்பாங்க” என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
சென்னை - நெல்லை  பேருந்தில்  துப்பாக்கி, அரிவாள் கண்டெடுப்பு - பயணிகள் அதிர்ச்சி
சென்னை - நெல்லை பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் கண்டெடுப்பு - பயணிகள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்Prashant Kishor Prediction : ”தமிழ்நாட்டில் பாஜக வெல்லும் மீண்டும் மோடி ஆட்சிதான்”  பிரசாந்த் கிஷோர்Suchitra interview  :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
சென்னை - நெல்லை  பேருந்தில்  துப்பாக்கி, அரிவாள் கண்டெடுப்பு - பயணிகள் அதிர்ச்சி
சென்னை - நெல்லை பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் கண்டெடுப்பு - பயணிகள் அதிர்ச்சி
Dengue: உஷார்! 8 மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு - தற்காத்துக் கொள்வது எப்படி?
Dengue: உஷார்! 8 மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு - தற்காத்துக் கொள்வது எப்படி?
ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு; என்ன நடந்தது?
ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு; என்ன நடந்தது?
TN 10th Result 2024: 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
TN 10th Result 2024: 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெண் காவலர்கள் என்னை தாக்கினர்” - நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
“பெண் காவலர்கள் என்னை தாக்கினர்” - நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Embed widget