மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் பேராசிரியை கொலை; ஆசிரியரை காட்டிக்கொடுத்த நெல்!
பள்ளி ஆசிரியைகளை தன் வலையில் வீழ்த்திய சுதாகர், அவர்களை தனது காம இச்சைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அங்காள பரமேஸ்வரி நகரில் வசிப்பவர் வெள்ளைச்சாமி. இவர் தனது மனைவி, மகன் மற்றும் மனைவியின் தங்கையுடன் வசித்து வருகிறார்.மனைவியின் தங்கையான அனிதா காஞ்சிபுரம் தனியார் கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி இரவு உணவருந்தி விட்டு இவர் வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று நிலையில் 11 மணி அளவில் வீட்டு மாடியில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அனைவரும் சென்று பார்த்தபோது அவரது அறை உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. அப்பொழுது பேராசிரியர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்து கதவு உடைக்கப்பட்டு அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் சந்தேக மரணம் என கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதில் கடந்த காலங்களில் அனிதா பணிபுரிந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக சுதாகர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். அனிதா கல்லூரிக்கு பேராசிரியராகவும், சுதாகர் அரசு பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராகவும் பணிகள் கிடைத்துச் சென்று விட்டனர். இருந்த போதிலும் இருவரது பழக்கம் தொடர்ந்து உள்ளது. சுகதாகர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவெடுத்தார். அதனை அனிதாவிடம் தெரிவித்தார். அதற்கு அனிதா நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள உன் அன்பு மட்டும் எனக்கு வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் சுதாகருக்கு திருமணம் நடந்து விட்டது.இந்த நிலையில் சுதாகர் திருமணமாகிய பின் பேசுவதையும், தனிமையில் சந்திப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க தொடங்கினார். இதனால் மனம் வெறுத்து போன அனிதா என்னுடன் பழகாவிட்டால் உன் குடும்பத்துக்கு சொல்லிவிடுவேன் என்று தொடர்ந்து மிரட்டி சுதாகருடன் பழகிவந்தார்.
கடந்த எட்டு மாதங்களாக சுதாகர் செல்போனில் கூட பேசுவதை நிறுத்திவிட்டார். மீண்டும் அனிதாவின் மிரட்டல் அதிகமானது. இனியும் பொறுக்க முடியாது, அனிதா உயிரோடு இருந்தால் எனது குடும்பவாழ்க்கை கெட்டுவிடும், அனிதாவிடம் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் இல்லை என்றால் அனிதாவை முடித்துவிடவேண்டும் என்கிற எண்ணத்தில் சுதாகர் அனிதாவின் வீட்டுக்கு சம்பவதன்று வந்துள்ளார். அப்பொழுது சுதாகர் எவ்வளவோ பேசியும் அனிதா தொடர்பை துண்டிக்க மறுத்துவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சுதாகர் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரி குத்திக் கொலை செய்துவிட்டு ரகசிய வழியாக தப்பியுள்ளார்.
போலீசாரிடம் சிக்கியது எப்படி
உயிரிழந்த அனிதாவின் செல்போன் இணைப்பு எண் மூலம் சைபர் கிரைம் உதவியிடன் போலீசார் விசாரணை மேற்கொண்டப் போது அனிதா இறப்பதற்கு முன் தொடர்புக்கொண்ட எண்களை ஆராய்ந்தப்போது சம்பவத்தன்று சுதாகர் எண்ணிற்கு அனிதா அழைத்துள்ளது பதிவாகியுள்ளது. மேலும் சுதாகர் செல்போன் எண்ணிற்கும்,அனிதாவின் எண்ணிற்கும் பல வருடங்களாக தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.அனிதா உயிரிழந்தப்போது அவரது அறையில் வாலிபர் ஒருவரின் டி-சர்ட்டின் பாக்கெட் பகுதியும், நெல் மணிகள் சிறிதளவும் இருந்ததுள்ளது. இந்த தடயங்களை வைத்து இது சுதாகரின் டி-சார்ட் என்றும் அரிசி உரிமையாளரின் மகனானதால் நெல் மணிகள் கிடந்துள்ளதும் போலீசாருக்கு தக்க ஆதரமாக கிடைத்துள்ளது.
தனியார் அரிசி ஆலை உரிமையாளரின் மகனா சுதாகர் பண வசதிகள் ஏராளமாக இருந்தாலும் கூட பள்ளி ஆசிரியைகளை தன் வலையில் வீழ்த்தி அவர்களை தனது காம இச்சைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உடற்கல்வி ஆசிரியான சுதாகரை கைது செய்த போலீசார் அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் - 2ல் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் சுதாகரை போலீசார் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion