மேலும் அறிய

மேட்ரிமோனி அறிமுகம்.. 50 பெண்களுடன் உல்லாசம்... தமிழ்நாட்டில் பெங்களூரு ‛மன்மதன்’ சூர்யா போட்ட ஆட்டம்!

கைது செய்யப்பட்ட சூர்யாவின் தந்தை  உளவுத்துறையில் எஸ்.பி-யாகவும், அம்மா ஆசிரியராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், திருமண தகவல் மையத்தில் தங்கள் மகளுடைய விவரங்களைப் பதிவு செய்து வைத்திருந்தனர். அந்தப் பெண்ணின் அம்மாவிடம் மதுரையைச் சேர்ந்த சூர்யா (28) என்பவர் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், தாம் காஞ்சிபுரத்தில் மனித உரிமை ஆணையத்தில் வேலை பார்ப்பதாகத் தெரிவித்தார். உங்கள் பெண்ணின் போட்டோவைப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருக்கிறது. நேரில் வந்து மற்ற விஷயங்களைப் பேசுகிறேன்' என்று கூறினார். மேலும் என்னுடைய அப்பாவும் அம்மாவும் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர் என ஆசையாக பேசி உள்ளார்.

மேட்ரிமோனி அறிமுகம்.. 50  பெண்களுடன் உல்லாசம்... தமிழ்நாட்டில் பெங்களூரு ‛மன்மதன்’ சூர்யா போட்ட ஆட்டம்!
 
இதனைத் தொடர்ந்து பெண் பார்ப்பதற்காக ஜூன் மாதம் இருபத்தி எட்டாம் தேதி நல்ல நாள் என்பதால் பெண் வீட்டார் மாப்பிள்ளையை வரச் சொல்லி இருக்கிறார்கள். நல்ல வேலை கை நிறைய சம்பளம் மற்றும் மாப்பிள்ளை அழகாக உள்ளார் உள்ளிட்ட காரணங்களால், பெண்ணின் குடும்பத்தினருக்கும் சூர்யாவைப் பிடித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து  செப்டம்பர் 18-ம் தேதி தன்னுடைய அப்பா, அம்மாவை வீட்டுக்கு அழைத்துவருவதாக சூர்யா, பெண் வீட்டினரிடம் தெரிவித்தார்.
மேட்ரிமோனி அறிமுகம்.. 50  பெண்களுடன் உல்லாசம்... தமிழ்நாட்டில் பெங்களூரு ‛மன்மதன்’ சூர்யா போட்ட ஆட்டம்!

பின்னர் செல்போனில் பேசி பழகி நம்பக தன்மை ஏற்படுத்திய சூர்யா ஒரு கட்டத்தில் தனியார் விடுதியில், அறை எடுத்து அந்த இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு அதனை வீடியோ தனது செல்போனில் பதிவும் செய்துள்ளார். பின்னர் பெண் வீட்டாரிடம் நிலம்  வாங்க வேண்டும் என கூறி ரூபாய் 7 லட்சத்தை திட்டமிட்டு சூர்யா அபகரித்துள்ளார். அப்பணத்தை நூதன முறையில் அபகரித்து விட்டு தனது செல்போனை அணைத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
மேட்ரிமோனி அறிமுகம்.. 50  பெண்களுடன் உல்லாசம்... தமிழ்நாட்டில் பெங்களூரு ‛மன்மதன்’ சூர்யா போட்ட ஆட்டம்!
 
தொடர்ந்து சூர்யாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டும், போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண். இச்சம்பவம் குறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் கானத்தூர் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் தமிழன்பன், தலைமை காவலர்கள் விஜயகுமார்,  கணேசன், காசிமுருகன், காவலர் சதீஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சூர்யாவை தேடி வந்த நிலையில், செல்போன் சிக்னலை வைத்து கோவையில் இளம்பெண்ணுடன் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது  சூர்யாவை கைது செய்தனர்.
மேட்ரிமோனி அறிமுகம்.. 50  பெண்களுடன் உல்லாசம்... தமிழ்நாட்டில் பெங்களூரு ‛மன்மதன்’ சூர்யா போட்ட ஆட்டம்!
 
இதனையடுத்து சூர்யாவை சென்னை கானத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். சூர்யா இதுவரைக்கும் சுமார் 50 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள பெண்களை குறிவைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பொய்யாக பழகி நம்பிக்கை ஏற்படுத்துவது வழக்கம். சூர்யா மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்திய பின்பு அந்த பெண்களுடன் விடுதியில் அறை எடுத்து உல்லாசமாக இருந்து வந்ததும் அதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ளார். சுமார் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை செல்போனில் வைத்திருந்த போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேட்ரிமோனி அறிமுகம்.. 50  பெண்களுடன் உல்லாசம்... தமிழ்நாட்டில் பெங்களூரு ‛மன்மதன்’ சூர்யா போட்ட ஆட்டம்!
பின்னர் இந்த வீடியோவை காண்பித்து அவ்வப்போது பணம் மற்றும் நகையை பறித்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் சென்னால் தன்னுடைய மானம் போய்விடும் என்ற அச்சத்தினால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் கொடுக்காமல் விட்டு விட்டுள்ளனர். தற்போது வரை சூர்யா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 7 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக கொடுக்கப்பட்ட 6 புகார்களில் போலீசாரிடம் சிக்காமல் தன்னுடைய கைவரிசையை காட்டி வந்த மோசடி மண்ணன் கானத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேட்ரிமோனி அறிமுகம்.. 50  பெண்களுடன் உல்லாசம்... தமிழ்நாட்டில் பெங்களூரு ‛மன்மதன்’ சூர்யா போட்ட ஆட்டம்!
 
சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் மோசடி மன்னன் சூர்யாவால் ஏமாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரில் உள்ள சூர்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து கானத்தூர் காவல் நிலையம் வரவைத்து விசாரித்த போது மாதந்தோறும் எங்களுக்கு பணம் அனுப்புவான் அந்த பணம் ரியல் எஸ்டேட் செய்து சம்பாதிப்பதாக கூறினான் என்றனர். உங்களுக்கு கிடைத்த பணம் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களை மிரட்டி பறித்த பணம் என்பதை காவல்துறையினர் சூர்யாவின் பெற்றோர்க்கு கூறினர். 

மேட்ரிமோனி அறிமுகம்.. 50  பெண்களுடன் உல்லாசம்... தமிழ்நாட்டில் பெங்களூரு ‛மன்மதன்’ சூர்யா போட்ட ஆட்டம்!
சூர்யா மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கானத்தூர் போலீசார் அவரிடமிருந்து கார் மற்றும் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சூர்யாவின் தந்தை  உளவுத்துறையில் எஸ்.பி-யாகவும், அம்மா ஆசிரியராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Statement: ஒண்ணு பொய்-ங்கற உண்மைய ஒத்துக்கோங்க.. இல்ல ரகசியத்த சொல்லுங்க #Daddy_Son...
ஒண்ணு பொய்-ங்கற உண்மைய ஒத்துக்கோங்க.. இல்ல ரகசியத்த சொல்லுங்க #Daddy_Son...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
DMK Seniors :  “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
DMK Seniors : “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
Zelensky: இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Statement: ஒண்ணு பொய்-ங்கற உண்மைய ஒத்துக்கோங்க.. இல்ல ரகசியத்த சொல்லுங்க #Daddy_Son...
ஒண்ணு பொய்-ங்கற உண்மைய ஒத்துக்கோங்க.. இல்ல ரகசியத்த சொல்லுங்க #Daddy_Son...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
DMK Seniors :  “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
DMK Seniors : “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
Zelensky: இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
MK Stalin slams H.Raja: நடு­ராத்­தி­ரி­யில் ஏன் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்?  எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி
MK Stalin slams H.Raja: நடு­ராத்­தி­ரி­யில் ஏன் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்? எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: விருதுகளை அள்ளி குவிக்கும் அனோரா திரைப்படம்! ஆஸ்கர் விருதுகள் நேரலை
Oscars 2025 LIVE: விருதுகளை அள்ளி குவிக்கும் அனோரா திரைப்படம்! ஆஸ்கர் விருதுகள் நேரலை
Embed widget