மேலும் அறிய

Hyderabad : நெற்றியில் குங்கும பொட்டு.. கவிழ்ந்து இருந்த சாமி போட்டோஸ்.. மர்ம முறையில் இறந்துகிடந்த குடும்பம்..!

அனைவரது நெற்றியிலும் குங்கும பொடியால் கோடுகள் வரையப்பட்டு, வீட்டின் தரையில் கடவுள்களின் புகைப்படங்கள் திரும்பியநிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது.

ஹைதராபாத் அருகே அமீன்பூரில் பணிபுரிந்து வந்த எம்என்சி ஊழியர் ஸ்ரீகாந்த் கவுட், ஆசிரியையான அவரது மனைவி அனாமிகா மற்றும் அவர்களது 7 வயது மகள் ஸ்னிக்தா ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 20 ம் தேதி அந்த குடும்பம் தங்கியிருந்த வீடு வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து சோதனை மேற்கொண்டத்தில், குடும்பத்தில் உள்ள அனைவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். 

மேலும், அனைவரது நெற்றியிலும் குங்கும பொடியால் கோடுகள் வரையப்பட்டு, வீட்டின் தரையில் கடவுள்களின் புகைப்படங்கள் திரும்பியநிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. இது அமானுஷ்ய சடங்கு மரணம் என்று காவல்துறையினர் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில், அந்த குடும்பம் அந்தளவுக்கு மதவாதிகள் அல்ல என்று தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து, அந்த குடும்பத்தின் அண்டை வீட்டாரான பெண் ஒருவர் கூறுகையில், “அந்த தம்பதிகள் இருவரும் நன்றாகப் படித்தவர்கள். உண்மையில், அனாமிகாதான் யாருக்கேனும் பிரச்சனைகள் என்றால் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவார். அவரது கணவரும் மிகவும் பகுத்தறிவு கொண்டவர். அந்த பெண்ணுக்கும் பெரிதாக மூடநம்பிக்கை இல்லை. யாருக்கேனும் தெளிவு மற்றும் வாழ்க்கைக்கான அணுகுமுறை வேண்டும் எனில் நாங்கள் அனாமிகாவிடம் தான் ஆலோசனை பெறுவோம் " என்றார்.

ஸ்ரீகாந்த் எம்என்சி நிறுவனத்தில் சாப்ட்வேர் ஊழியராக பணிபுரிந்த நிலையில், அனாமிகா கார்ப்பரேட் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 18 ஆம் தேதி மாலையில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சந்தேகிக்கப்படுகிறது. பெற்றோரின் அழைப்புக்கு அவர்கள் பதிலளிக்காததால், கவலையடைந்த குடும்பத்தினர் அவர்களது வீட்டுக்குச் சென்றனர். ஆனால், கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு பயந்துபோன குடும்பத்தினர் தொலைபேசிகள் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்ந்து, போன் சுவிட்ச் ஆஃப் என வந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து, காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளனர். 

இதற்கிடையில், குற்றம் நடந்த இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. தடயங்கள் எதுவும் கிடைக்காததால், இந்த வழக்கில் முன்னேற்றம் காண போலீசார் தடயவியல் நிபுணர்களை  வரவழைத்துள்ளனர். மேலும், குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174ன் கீழ் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

 

தலைப்பு செய்திகள்

வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
மதுரையில் கஞ்சா, ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞர்: அதிரடி கைது!
மதுரையில் கஞ்சா, ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞர்: அதிரடி கைது!
பள்ளி மாணவியின் அதிரடி புகார்... போக்சோவில் சிக்கிய 3 சிறுவர்கள்: தஞ்சையில் அதிர்ச்சி
பள்ளி மாணவியின் அதிரடி புகார்... போக்சோவில் சிக்கிய 3 சிறுவர்கள்: தஞ்சையில் அதிர்ச்சி
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
Embed widget