மேலும் அறிய
Advertisement
மனைவி இறந்ததை கண்டு தூக்கில் தொங்கிய கணவர்
மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராணிபேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வம்(55). இவரது மனைவி உமா(51). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மனைவி உமாவிற்கு கடந்த 7 ஆண்டுகளாக பக்கவாதம் இருந்த நிலையில் இன்று காலை இறந்துள்ளார். மனைவியை எழுப்ப முயன்ற கணவர் செல்வத்திற்கு மனைவி இறந்த செய்தி பேரிடியானது.
அதிர்ச்சி அடைந்த செல்வம் துக்கம் தாளமுடியாமல் விவசாய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து வந்த கலவை காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி சம்பவ இடத்திற்கு வந்து இரு உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மூன்று குழந்தைகளை தவிக்க விட்டு கணவன், மனைவி இருவரும் இறந்த நிலையில், செய்வதறியாது மூன்று குழந்தைகளும் தவித்து வருவது கிராமத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகள் எம்.ஏ., கடைசி மகள் ப்ளஸ் 2 படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion