இந்து மகா சபா அமைப்பின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ போக்சோவில் கைது!
சென்னையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்து மகா சபா அமைப்பின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அகில இந்திய இந்து மகா சபா அமைப்பின் தலைவர் ஸ்ரீ போக்சோவில் கைது!
கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற ஸ்ரீ கண்டன் அகில இந்திய இந்து மகா சபா அமைப்பை உருவாக்கி தலைவராக உள்ளார். இவர் ஆன்மிகம் தொடர்பாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:
இந்தநிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோடம்பாக்கத்தில் ஆதரவற்ற சிறுமி தனது அத்தை வீட்டில் தங்கி பள்ளி படிப்பை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது அத்தை குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அந்த சிறுமியை பாலியல் தொழில் ஈடுபட வற்புறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்து மகா சபை அமைப்பின் தலைவர் ஸ்ரீ என்பவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்து மகா சபா தலைவர் போக்சோவில் கைது
இந்து சம்பவம் தொடர்பாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மாணவி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீஸார் கோடம்பாக்கம் ஸ்ரீ கண்டனையும், சிறுமியின் அத்தையையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் இருவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
சிறுமியின் அத்தை செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. காரணம் அச்சிறுமியின் அந்தரங்க வீடியோவை வைத்து அவரது அத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், செல்போனில் வீடியோ எதும் உள்ளதா அல்லது வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து மகா சபா அமைப்பின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ மீது ஏற்கனவே மிரட்டல், நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குள் பதியபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





















