ரூ.10 கோடி மதிப்பு உயர்ரக கஞ்சா... திருச்சி விமான நிலையத்தில் சிக்கிச்சு: பயணியிடம் தீவிர விசாரணை
தங்கள் உடமைகளில் இரண்டு அரிய வகை உடும்புகளை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் இருந்து உடும்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்: பாங்காக்-ல் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. ஏன்னா அதோட மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்பதுதான். அதுமட்டுமா? அரியவகை உடும்பையும் கடத்தி வந்திருக்காங்க.
திருச்சி விமான நிலையத்தில் சமீபகாலமாக பல்வேறு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. பாம்புகள், நட்சத்திர ஆமைகள், பல்லிகள் என்று பல்வேறு வகையான அரிய வகை உயிரினங்கள் கடத்திக்கிட்டு வர்றாங்க. அப்படிதான் மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பேட்டிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பயணிகள் இருவர் தங்கள் உடமைகளில் இரண்டு அரிய வகை உடும்புகளை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் இருந்து உடும்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த உடும்புகள் நகர்ந்து செல்லாமல் இருக்கணும்னு வாய், கால்கள் ஆகியவற்றை கட்டி வைத்து இருந்ததை பார்த்து அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. இது ஒருபக்கம்ன்னா... அடுத்த அதிர்ச்சி பெரிய அதிர்ச்சிதான்.
ஹைட்ரோபோனிக் எனப்படும் 9.82 கிலோ உயர்ரக கஞ்சா போதை பொருள் கடத்தி வந்த பயணியும் சிக்கி இருக்கார். இவர் பாங்காக்-ல் இருந்து இந்த கஞ்சாவை கடத்தி வந்து இருக்காரு. இதோட மதிப்பு ஏறத்தாழ ரூ.10 கோடி என்பதுதான் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட காரணம்.
பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு வந்த விமானத்தில் உடைமையில் மறைத்து கடத்திவரப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான, சுமார் 9.82 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட விமான பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் 9.82 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு 10 கோடி என கூறப்படுகிறது





















