மேலும் அறிய

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மனைவி.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற காதலி

மகிழ்ச்சியாக இவர்களது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் நாகேஷ் யாதவுக்கு சுஜாதா என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் திருமணத்தை மீறிய உறவில் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் தான் இப்படியான கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வெளியிட்ட தகவலின்படி, “ ஆந்திரப்பிரதேச மாநிலம் நல்கொண்டா மாவட்டத்திக் நம்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட கேத்தபள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு  நாகேஷ் யாதவ் என்ற நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். மகிழ்ச்சியாக இவர்களது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் நாகேஷ் யாதவுக்கு சுஜாதா என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்துள்ளது. நாளடைவில் இந்த விவகாரம் நாகேஷின் மனைவிக்கு தெரிய வந்த நிலையில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்த நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக நாகேஷூக்கும், சுஜாதாவுக்கும் இடையே சமீப காலமாக பிரச்னை வெடித்துள்ளது. 

இதனால் கடும் அதிருப்தியடைந்த சுஜாதா, தங்களுடைய உறவில் ஏற்பட்ட பிரச்னைக்கு  நாகேஷின் மனைவி தான் காரணம் என்று நினைத்து அவரை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாகேஷ் மனைவியை கொல்ல திட்டம் தீட்டினார். அதன்படி சம்பவ தினத்தன்று வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற சுஜாதா, ​​நாகேஷின் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண் சுதாரிப்பதற்குள் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் நாகேஷின் மனைவி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருக்கு அருகில் இருந்த அவரது ஆறு மாத குழந்தையும் பலத்த காயமடைந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நல்கொண்டா போலீசார், சுஜாதா மற்றும் நாகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். 

மற்றொரு சம்பவம்

இதேபோல் கள்ளக்காதல் விவகாரத்தில் விகாராபாத் மாவட்டம் மார்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட பில்கல் கிராமத்தில் மற்றொரு கொலை சம்பவம் நடந்துள்ளது. அங்கு சேரலா நர்சிம்லு என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் திருமணத்தை மீறிய தகாத உறவே கொலைக்குக் காரணம் என சொல்லப்பட்டுள்ளது. சேரலா நர்சிம்லு தனது பண்ணைக்கு அருகில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உள்ளூர் விவசாயி ஒருவர் பண்ணைக்குச் சென்றபோது இந்த சம்பவத்தை கண்டு உடனடியாக காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். 

நர்சிம்லு விவசாய வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு வசந்தா என்ற மனைவியும், சாய் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீஹரி என இரு மகன்களும் உள்ளனர். முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் இது கொலை என்பது வெளிச்சத்துக்கு வந்தது. 

இறந்த நர்சிம்லு, பில்கல் கிராமத்தைச் சேர்ந்த பெகாரி நர்சம்மா என்ற பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இது தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்தது. பிரச்னை அதிகரித்ததால் மூன்று மாதங்களாக  பெகாரி நர்சம்மாவை சந்திக்காமல் நர்சிம்லு தவிர்த்து வந்தார். இதனிடையே நர்சிம்லுவை பெகாரி போனில் தொடர்பு கொண்ட நிலையில், அவரிடம் வசந்தா தன்னைக் கொன்றுவிட்டு தனது கணவருடன் வாழுமாறு தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் ஜனவரி 29ம் தேதி நர்சிம்லு இரவு 8 மணிக்கு வயலுக்குச் சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டார். வசந்தா அளித்த புகாரின் அடிப்படையில் பெகாரி நர்சம்மா, அவரது கணவர் பாப்பையா உள்ளிட்ட 3 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget