மேலும் அறிய
Advertisement
நட்பை இழந்த சோகம்... நண்பன் சென்ற இடத்திற்கே செல்வதாக கூறி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!
நண்பனை பிரிந்து வாழ முடியாமல், நண்பன் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒருவர்
சென்னை அடுத்த் குரோம்பேட்டை லக்ஷ்மிபுரம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (35) இவருடைய மனைவி ராஜேஸ்வரி (28) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் லட்சுமிபுரம் பகுதியில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தான் வாடகைக்கு வந்துள்ளனர். சரத்குமார் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
சரத்குமாரின் உயிர் நண்பர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார். உயிர் நண்பரை இழந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருந்திருக்கிறார் சரத்குமார். துக்கத்தை மறப்பதற்காக அவர் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்திருக்கிறார். நேற்று இரவும் அதேபோல் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வந்து தனது படுக்கையில் படுத்திருக்கிறார். உள்பக்கமாக தாளிட்டுக்கொண்டு அவர் படுத்துவிட்டதால், வேதனையில் இருக்கும் அவரை தொந்தரவு செய்யவேண்டாம் என்று எண்ணிய அவரது மனைவி ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் அடுத்த அறையில் தூங்கி இருக்கிறார்.
அடுத்த நாள் காலையில் விடிந்து வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரி, அக்கம்பக்கத்தினரிடம் தெரிவிக்க, அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து கதவைத் பலமாக தட்டியபோதும் திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ந்தனர். அங்கே சரத்குமார் மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அக்கம்பக்கத்தினர் குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரோம்பேட்டை போலீசார் செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சம்பவம் குறித்து ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தியதில், துக்கத்தில் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வேதனையில் புலம்பி வந்தார் என்று தெரிவித்துள்ளார். அவன் போன இடத்துக்கே போவேனோ என புலம்பினார் என சொல்லியிருக்கிறார். நண்பன் இறந்த தூக்கத்தினால் உயிர் நண்பனைப்போலவே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செல்வகுமாரின் செயல் அப்பகுதியினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவர் மனைவி ராஜேஸ்வரி கூறுகையில், ”என் கணவர் அதிகளவு மது போதையில் இருந்து வந்தார், என் நண்பன் சென்ற இடத்துக்கே நானும் போவேன் என கூறிக்கொண்டு இருந்தார்” என போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion