மேலும் அறிய

கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

கரூரில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் உட்பட நான்கு நபர்கள் போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் மட்டுமே, அளித்து உறங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பொதுமக்கள் தேவையின்றி நடமாட கூடாது, என நாள்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தங்களது அறிக்கையின் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.  


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

அதைத்தொடர்ந்து ஊரடங்கு நாட்களில் பொது நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆங்காங்கே தமிழக அரசின் விதிகளை மீறி திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் அவர்கள் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுபோல் கரூர் மாவட்டத்தில் இதுபோல் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறதா, என துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர். கரூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அவர்களுக்கு ரகசிய தகவல் அடிப்படையில் வெண்ணைமலை முருகன் ஆலயத்தில் சிறுமிக்கு திருமணம் பெற்றோர் சம்மதத்துடன்  நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரி தலைமையில் மேற்படி விசாரணையில் வெண்ணைமலை முருகன் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்து கொண்டனர். 

இந்த சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்த உறவினர்கள், இளைஞர் உள்ளிட்ட நான்கு நபர்களை மாவட்ட சமூகநலத்துறை வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி புகாரின் பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேலப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (22) இவருக்கும், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ,கோவிந்தம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் - ராஜேஸ்வரி ஆகியோரின் 16 வயது மகளான சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 7-ஆம் தேதி கரூரை அடுத்த வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், அன்றிரவே முதலிரவு ஏற்பாடு செய்து நடந்துள்ளது. சிறுமிக்கு நடந்த சட்டவிரோத செயல் சம்பந்தமாக மாவட்ட சமூக நலத்துறை வளர்ச்சி அலுவலர் தனலட்சுமிக்கு புகார் சென்றுள்ளது. புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிறுமியை திருமணம் செய்த இளைஞர் சந்தோஷ் அவரது பெற்றோர் மணிவேல் மற்றும் ராஜேஸ்வரி, சந்தோஷ் தாய் அமுதவல்லி ஆகியோர் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். 


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

 கரூர் அருகே கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறுமிக்கு பெற்றோர் திருமண நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget