மேலும் அறிய
Advertisement
கூடுவாஞ்சேரி கொடூர விபத்து.. நிதியுதவி அறிவித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..
potheri accident : "சென்னை பொத்தேரி பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது "
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில், பிரபல தனியார் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரி என்பதால், காலை வேளையில் எப்பொழுதுமே பரபரப்புடன் காணப்படும். மாணவ மாணவிகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் என எப்பொழுதும் மக்கள் நடமாட்டத்துடனே இருக்கும்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை
தற்பொழுது , தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை, சென்னை திருச்சி தேசிய சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் முறையான சிக்னல் உள்ளிட்டவை வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்தநிலையில் இன்று காலை 10 மணி அளவில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொத்தேரி பகுதியில், அதிவேகமாக தாம்பரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, அங்கு சாலையை கடக்க 3 இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 4 பேர் மீது கண்மூடித்தனமாக இடித்து விபத்தை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து டிப்பர் லாரி அங்கு இருந்த சென்டர் மீடியங்களில் மோதி , அதனை அடுத்து மரத்திலும் மோதியது. மரத்தில் மோதியதில், மரமும் முறிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் , லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பவானி (40), மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜஸ்வந்த் (23) கார்த்திக்(24) மற்றும் இசை பள்ளி ஆசிரியர் சைமன் (40) என 4 பேர் உயிரிழந்தனர். பார்த்தசாரதி(50) என்பவர் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உறவினர்கள் சாலை மறியல்
இந்த சம்பவம் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியை ஒட்டி வந்த ஓட்டுனரான திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது :
இருசக்கர வாகனங்கள் சென்டர் மீடியரில் சாலை கடக்க காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சாலை, வாகனங்கள் வராமல் இருந்தன. எனவே இருசக்கர வாகனங்கள் சாலையை கடக்க முயற்சி மேற்கொண்ட பொழுது, திடீரென அது இத வேகத்தில் வந்த, டிப்பர் லாரியால் கண்ணிமைக்கும் நேரத்தில் 4 உயிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சென்றதாக நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.
முதலமைச்சர் நிவாரண உதவி
இந்நிலையில், பொத்தேரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்த்தசாரதி என்பவருக்கு ரூ.50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.
எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion