மேலும் அறிய

கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு - வெவ்வேறு இடங்களில் 4 பேர் கைது

கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு 39, கரூர், தான்தோன்றி மலை டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த குடியரசு 22, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பறித்தார். .இது குறித்த புகாரின் பெயரில் குடியரசை தாந்தோன்றி மலை போலீசார் கைது செய்தனர்.
 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி சேர்ந்தவர் காளீஸ்வரன் 20, இவர் கரூர் காமராஜ் மார்க்கெட் அருகில் நின்று கொண்டிருந்த போது, கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையை சேர்ந்த சண்முகசுந்தரம் வயது 28, கத்தியை காட்டி பணம் பறித்தார் . கரூர் டவுன் போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

 மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா 33, கரூர், அருகம்பாளையம் டாஸ்மாக் கடை அருகில்  நின்று கொண்டிருந்த போது நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீ ராம் கார்த்தி 32, அவரிடம் இருந்த பர்ஸை திருடி சென்றனர்.வெங்கமேடு போலீசார் ஸ்ரீராம் கார்த்திகை கைது செய்து சிறையில் அடைத்தனர்.கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன் 23, மக்கள் பாதை பிரிவு சாலையில் நடந்து சென்ற போது, கரூர் , மாவடியன் கோவில் பகுதியை சேர்ந்த வினோத் குமார் 23, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து கரூர் டவுன் போலீசார் வினோத் குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ச்மேனிடம் பணம் பறித்த திருநங்கைகள் மீது வழக்கு 

 
கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

பெட்ரோல் பங்க் வாட்ச்மேனிடம் பணம் பறித்து கொண்டு ஓடிய திருநங்கைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆறுமுகம் 73, இவர் கரூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது நிரஞ்சனா, எழில், சஞ்சனா ஆகிய திருநங்கைகள் வந்துள்ளனர். அவர்கள் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்துள்ளனர். அப்போது வாட்ச்மேனிடமிருந்து 9,200 ரூபாய் பணத்துடன் இருந்த பேக்கை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து வாட்ச்மேன் அளித்த புகார் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே நில தகராறு: விவசாயியை அறிவாளால் வெட்டியவர் கைது.


கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வலையார்பாளையத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் ராஜேந்திரன் இவரது தாய் பெயரில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்கள் 3 பேரும் பயன்படுத்திவந்துள்ளனர். இந்நிலையில் சீத்தலவாய் மஞ்சமேட்டை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ் வயது 48 என்பவர் இந்த 6 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தம் என்றும் அதில் ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்களுக்கு உரிமை இல்லை என கூறி பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காலை ராஜேந்திரன் தனது மனைவி மகேஸ்வரி உடன் தான் பயன்படுத்தி வரும் இடத்தினை சுத்தம் செய்த போது அங்கு வந்த ரமேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ் அப்போது ராஜேந்திரனை அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த வெட்டு காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget