மேலும் அறிய

தஞ்சையில் பெண்கள் குளிப்பதை பார்க்க வெப் கேமிரா பொருத்திய முன்னாள் போலீசின் மகன் கைது...!

வெங்கடஷன், நசீர் அகமது தந்தை முகமது இக்பாலிடம் சென்று கூறியதற்கு, பாத்ரூம் திறந்து குளித்தால்,  பார்க்கத்தான் செய்வாங்க பாத்ரூம வேணுனா மூடிக்க சொல்லுங்கள் எனச் சொல்லி சண்டையிட்டுள்ளார்.

தஞ்சாவூர் தெற்குவீதியில் வசிக்கும்  அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றின் உதவியாளரான வெங்கடேஷ் திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி இவரது வீட்டின் குளியலறையின் மேல ஏதோ சிகப்பு நிறத்தில் மின்னுவது போல் இருப்பதை பார்த்த வெங்கடேஷின் மனைவி, தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குளியலறைக்கு சென்று பார்த்த போது, பாத்ரூமிற்கு ஜன்னல் பகுதியில் பார்த்ததில் மரக்குச்சி ஒன்றில் வெப் கேமராவை கட்டி ஜார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர் பேங் இணைத்து அதனை பிளக் பாயிண்டில் இணைத்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வெங்கடேஷின் வீட்டின் அருகில் வசிக்கும் நசீர் அகமது (35) என்பவரை கைது செய்தனர். நசிர் அகமதுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேசன்  வீட்டின் அருகில் வசிக்கும் நசீர் அகமது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார். அவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது. நசீர் அகமதுவின் அப்பா முகமது இக்பால் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

இதற்கு சில நாட்களுக்கு முன் நசீர் அகமது அவர் வீட்டு மாடியில் நின்று கொண்டு,  வெங்கடேஷின் மகள் மற்றும் மனைவி குளிப்பதை பார்த்துள்ளார். இதனை வெங்கடஷன், நசீர் அகமது தந்தை முகமது இக்பாலிடம் சென்று கூறியதற்கு, பாத்ரூம் திறந்து குளித்தால்,  பார்க்கத்தான் செய்வாங்க பாத்ரூம வேணுனா மூடிக்க சொல்லுங்கள் எனச் சொல்லி சண்டையிட்டுள்ளார்.

வெங்கடேஷின் வீட்டிற்கும் நசீர் அகமது வீட்டுக்கும் நடுவில் ஒரு வீடு உள்ளது. காலியாக உள்ள அந்த வீட்டை வாடகைக்கு கேட்டு வந்தால் காண்பிப்பதற்காக அந்த வீட்டு உரிமையாளர் சாவியை நசீர் அகமது வீட்டில் கொடுத்து வைத்திருந்தார். அதனை பயன்படுத்தி கொண்ட நசீர் அகமது அந்த வீட்டு ஜன்னலில் இருந்த கண்ணாடியை அகற்றி எடுத்து விட்டு அதன் வழியாக ஒரு அடி தூரத்தில் இருந்த வெங்கடேசனின் வீட்டு ஜன்னலில் மரக்குச்சி ஒன்றில் கட்டி வெப்கேமரா வைத்துள்ளார். கேமரா ஆப் ஆகாமல் இருப்பதற்காக அதனுடன் பவர் பேங்கையும் இணைந்து எந்நேரமும் சார்ஜ் ஏறக்கூடிய வகையில் செட்அப் செய்து வெங்கடேஷின் வீட்டில் உள்ளபெண்கள் குளிப்பதை பார்த்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி  இரவு ஏழு மணியளவில் குளிக்க சென்ற வெங்கடேஷன் மனைவி ஜன்னலில் சிகப்பு மற்றும் பச்சை நிற லைட் எரிவதைப் பார்த்து, கணவனிடம், கூறியதால் தற்போது இவை தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து போலீஸில் புகார் அளித்ததின் பேரில், நசீர் அகமதுவை போலீசார் கைது செய்ததுடன் பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த கேமரா, பவர் பேங்க் மற்றும் மெமரி கார்டு ஆகிவற்றைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் நசீர்அகம்மது இது போல் வேறு யாரையாவது படம் பிடித்துள்ளாரா, குளிக்கும் படங்களை வேறு யாருக்கேனும்  அனுப்பியுள்ளரா அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருவெண்காடு பைக் மோதல் விவகாரம்: ஆட்சியர் அலுவலகக் கேட் அடைப்பு - பொதுமக்கள் கடும் அவதி!
திருவெண்காடு பைக் மோதல் விவகாரம்: ஆட்சியர் அலுவலகக் கேட் அடைப்பு - பொதுமக்கள் கடும் அவதி!
திருமணமான நபருடன் காதல்.. வேறொரு நபருடன் பழக்கம்.. பொறாமையில் இளம்பெண் கொடூர கொலை!
திருமணமான நபருடன் காதல்.. வேறொரு நபருடன் பழக்கம்.. பொறாமையில் இளம்பெண் கொடூர கொலை!
சென்னையில் பயங்கரம்: பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரன்... துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்
சென்னையில் பயங்கரம்: பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரன்... துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்
ஆபாச வீடியோ ; ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுமிகளுக்கு பாலியல் அத்துமீறல்
ஆபாச வீடியோ ; ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுமிகளுக்கு பாலியல் அத்துமீறல்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
CM Joseph Vijay: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.. உணவு பரிமாறிய விஜய்.. விளையாட்டு காட்டிய குழந்தைகள்!
CM Joseph Vijay: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.. உணவு பரிமாறிய விஜய்.. விளையாட்டு காட்டிய குழந்தைகள்!
TN Chief Secretary: புதிய தலைமை செயலாளர்..! சொந்த பெயரை கொண்ட IAS அதிகாரியை டிக் அடிக்கும் CM விஜய்? சாய்குமார்?
புதிய தலைமை செயலாளர்..! சொந்த பெயரை கொண்ட IAS அதிகாரியை டிக் அடிக்கும் CM விஜய்? சாய்குமார்?
Agriculture Crop Loan : விவசாயிகள் பயிர் கடன்.! எதிர்பார்த்த சூப்பர் செய்தி வந்தாச்சு- தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
விவசாயிகள் பயிர் கடன்.! எதிர்பார்த்த சூப்பர் செய்தி வந்தாச்சு- தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
TN Govt: அக்.1 முதல் GPS கட்டாயம்..! கடத்தலை தடுக்க அதிரடி திட்டம் - குவாரிகள் தொடர்பாக அரசு புதிய முடிவு
அக்.1 முதல் GPS கட்டாயம்..! கடத்தலை தடுக்க அதிரடி திட்டம் - குவாரிகள் தொடர்பாக அரசு புதிய முடிவு
Seeman: வெறும் ரீல்ஸ் மட்டும் தான்.. தவெக ஆட்சியில ஒன்னுமே இல்ல.. விஜயை விளாசிய சீமான்!
Seeman: வெறும் ரீல்ஸ் மட்டும் தான்.. தவெக ஆட்சியில ஒன்னுமே இல்ல.. விஜயை விளாசிய சீமான்!
Embed widget