மேலும் அறிய

செங்கம் அரசு பள்ளியில் நடனமாடி சக மாணவர்களை ராகிங் செய்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட்

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் நடனமாடி சக மாணவர்களை ராகிங் செய்து தாக்கிய 5 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையிலேயே பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் சக பள்ளி மாணவர்களை ராகிங் நடனம் ஆட வைப்பது போலவும் ஒரு மாணவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு மற்ற மாணவர்களை விசிறி மூலம் விசிற வைத்துள்ளனர். இதில் நடனம் ஆடாத மாணவர்களையும் காற்று வீசாத மாணவர்களை உடன் பயிலும் மாணவர்கள் அடித்துள்ளனர். கல்லூரிகளிலேயே மாணவர்களுக்குள் மாணவர்கள் ராக்கிங் செய்யக்கூடாது என கடுமையான சட்டங்கள் இருந்தாலும் இதுபோல பள்ளிகளில் மாணவர்கள் ராகிங் செய்வதை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளது வேதனை அளிப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.


செங்கம் அரசு பள்ளியில் நடனமாடி சக மாணவர்களை ராகிங் செய்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட்

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ராகிங் செய்வது மட்டுமல்லாமல் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியாகி உள்ளனர். இந்நிலையில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக திருவண்ணாமலை துணை ஆட்சியர் வெற்றிவேல் தலைமையில் பள்ளி வளாகத்தில் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது இதில் துணை ஆட்சியர் வெற்றிவேல் செங்கம் கல்வி மாவட்ட அதிகாரி அரவிந்தன் மாவட்ட கல்வி ஆய்வாளர் குணசேகரன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரேவதி முருகமணி தலைமையாசிரியர் காமத் ஆகியோர் கொண்ட குழுவினர் பங்கேற்று வகுப்பறையில் நடனமாடிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தாக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை வரவழைத்து மாலை 3 மணி முதல் 7 மணி வரையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

செங்கம் அரசு பள்ளியில் நடனமாடி சக மாணவர்களை ராகிங் செய்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட்

இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நடனமாடி அட்டகாசம் செய்த மாணவர்களின் பெற்றோர்களிடம் வகுப்பறையில் நடந்த சம்பவம் தொடர்பாக எழுத்துபூர்வமாக கடிதம் ஒன்று எழுதி வாங்கபட்ட நிலையில்தொடர்ந்து பாட்டு பாடி நடனமாடிய 5 மாணவர்களை ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்குவதற்கு முந்தைய நாளான மே 4ஆம் தேதி வரை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.  

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

எந்த தாய்க்கும் எது மாதிரி நடக்கவே கூடாது.. கதறிய கீர்த்திகா.. விடாத ஹரி பிரசாத்.. வேலூரில் பயங்கரம்!
எந்த தாய்க்கும் எது மாதிரி நடக்கவே கூடாது.. கதறிய கீர்த்திகா.. விடாத ஹரி பிரசாத்.. வேலூரில் பயங்கரம்!
சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: திண்டிவனம் விசிக மாவட்ட செயலாளரின் மகன் கைது...!
சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: திண்டிவனம் விசிக மாவட்ட செயலாளரின் மகன் கைது...!
திருவண்ணாமலை தீப தரிசனம் சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி
திருவண்ணாமலை தீப தரிசனம் சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி
பாதர் நம்ம உறவு என் காதல் கணவருக்கு தெரிஞ்சிடுச்சி.. வெளியான ஆடியோ! கையும் களவுமாக சிக்கியது எப்படி?
பாதர் நம்ம உறவு என் காதல் கணவருக்கு தெரிஞ்சிடுச்சி.. வெளியான ஆடியோ! கையும் களவுமாக சிக்கியது எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
TN Weather News: சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
Toyota Hycross: அப்க்ரேடில் மாஸ் காட்டியதா ஹைக்ராஸ்? விலையில் வந்த மாற்றம் என்ன? அம்சங்கள், வசதிகள் OK-வா?
அப்க்ரேடில் மாஸ் காட்டியதா ஹைக்ராஸ்? விலையில் வந்த மாற்றம் என்ன? அம்சங்கள், வசதிகள் OK-வா?
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Embed widget