காதல் திருமணம் செய்த மகள்: பேரக்குழந்தைகளை உயிரோடு எரித்த தந்தை!
குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்வோரை அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆணவப்படுகொலை செய்துவிடுவதாக பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் விருப்பத்திற்கு மாறாக தன்னுடைய மகள் காதல் திருமணம் செய்துக்கொண்டதால், ஆத்திரமடைந்த தந்தை சொந்த வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 4 பேரக்குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொழில்நுட்பம், கலாச்சாரம் என பல வழிகளில் முன்னேற்றத்தைக் கண்டாலும் இன்னமும் சாதி என்ற ஒற்றைக்கோட்பாடுடன் தான் பலர் வாழ்ந்து வருகின்றனர். தன் இனத்திற்குள் தான் தன் குழந்தைகள் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அதனை மீறி திருமணம் செய்துக்கொண்டாலும் தன்னுடைய உறவு என்பதைக்கூட நினைக்காமல் அவர்களுக்கு பல இன்னல்களைத் தருகின்றனர். சில சமயங்களில் ஆணவப்படுகொலையும் அரங்கேறுகிறது.
இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் மத்திய பாகிஸ்தானில் உள்ள முசாபர்கர்க் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மன்சூர் ஹூசைன் என்பவருக்கு ஃபவூசியா பீபி மற்றும் குர்ஷித் மாய் என்ற இரு மகள்கள் உள்ளனர். மகிழ்ச்சியாய் வாழ்ந்துக்கொண்டிருந்த நிலையில் தான், பவூசியா பீபா, மெஹபூப் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் மறுப்புத்தெரிவிக்கவே அவர்களை மீறி கடந்த 18 மாதங்களுக்கு முன்பாக இருவரும் திருமணம் செய்துக்கொண்டார்கள். ஆனால் இத்திருமணத்தில் மன்சூருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை எனக்கூறப்படுகிறது. இதனால் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சனை நிலவிவந்தது. இதனால் மன்சூர் ஹுசைன் தன்னுடைய மகள்களை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான் எப்படியாவது இவர்களை ஆணவக்கொலை செய்யும் வேண்டும் என்பதற்காக, தனது மகள்கள் வசித்து வந்த வீட்டிற்கு தீ வைத்து விட்டு தலை மறைவாகியுள்ளார். இந்த தீ விபத்தினால் மன்சூரின் இருமகள்கள் மற்றும் 13, 6, 2 வயதுடைய மற்றும் நான்கு மாதக்குழந்தைகள் உள்பட 6 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். ஆனால் சம்பவம் நடந்தன்று மெஹபூப் மற்றும் வேலைக்கு சென்றிருந்தார். திரும்பி வந்த போது வீட்டில் உள்ள அனைவரும் உடல் கருகி இறந்துள்ளதைப்பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் என்ன நடந்தது? யார் செய்திருப்பார்கள்? என விசாரணையைத் தொடங்கும் போது தான், சொந்த மகள்களுக்கே தந்தை தீயிட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மன்சூரைப் போலீசார் தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்தமைக்காக இரு மகள்கள் உள்பட பேரக்குழந்தைகளை தீயிட்டு கொன்ற சம்பவம் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் பெற்றோர்களின் சம்மதமின்றி திருமணம் செய்துக்கொள்ளவதாக கூறப்படுகிறது. மேலும் குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்வோரை அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆணவப்படுகொலை செய்துவிடுவதாக பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது.