இப்படி ஒரு பிஸினஸா? சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை! தாயும் தந்தையும் செய்த கொடூரம்!
கருமுட்டை உருவாவதற்காக வளர்ப்பு தந்தை சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும், பாலியல் வன்கொடுமை செய்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை விற்பனை செய்து வந்த தாய், வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தனியார் மருத்துவமனையில் கருமுட்டையை விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல்துறைக்கு கடந்த மாதம் புகார் ஒன்று வந்தது. இதனைத்தொடர்ந்து, இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை புரோக்கர் மாலதி ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான மூன்று பேர்களிடம் போலீசார் நடத்திய விசாரணை பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
பாலியல் சீண்டல் மூலம் கருமுட்டை
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கணவரை பிரிந்து பெயின்டர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார். தனது மகள் 12 வயதில் வயதுக்கு வந்ததும் கருமுட்டை விற்பனை தொழிலில் இறங்கியிருக்கிறார். கருமுட்டை உருவாவதற்காக வளர்ப்பு தந்தை சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும், பாலியல் வன்கொடுமை செய்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், சிறுமிக்கு கருமுட்டை உருவானதும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருமுட்டையை விற்பனை செய்து வந்துள்ளார். பல வருடங்களாக தனியார் மருத்துவமனையில் கருமுட்டையை விற்பனை செய்து பணத்தை பெற்று வந்துள்ளார் சிறுமியின் தாயார்.
ஒவ்வொரு முறையும் விற்பனை செய்யும் போது ரூ.20 ஆயிரம் வாங்கியுள்ளார். இதற்கு புரோக்கராக மாலதி என்பவர் செயல்பட்டுவந்துள்ளார். அவருக்கு ரூ.5 ஆயிரம் கமிஷன் கொடுக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் கருமுட்டை கொடுத்து பணம் பெற வசதியாக சிறுமிக்கு 20 வயது என போலியாக ஆதார் கார்டை தயாரித்து, சிறுமியின் பெயரை மாற்றி மருத்துவமனையில் கொடுத்துள்ளனர். இதுவரை சிறுமியிடம் இருந்து 8 முறை கருமுட்டையை பெற்றுள்ளனர்.
சிறுமிக்கு கொலை மிரட்டல்
இதுதொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவோம் என தாய், வளர்ப்பு தந்தை மிரட்டி வந்ததால் சிறுமி எதையும் கூறாமல் இருந்த நிலையில், இவர்களின் கொடுமையை தாங்காமல் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சித்தி, சித்தப்பாவிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் மூலம் இந்த விஷயம் தெரியவர, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பெற்ற மகளையே கொடுமை செய்து பணத்திற்காக கருமுட்டையை விற்பனை செய்து வந்த தாயை கண்டு அப்பகுதி மக்கள் கொதிப்படைந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்