மேலும் அறிய

'ஏன் சார் காமெடி பண்றீங்க' போதை ஆசாமி வங்கிகணக்கில் ரூ.3.25 கோடி ; திணறும் சைபர் கிரைம் போலீஸ்

புதிய தொழில் துவங்க போவதாகவும், ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் கொடுத்தால், மாதம், 1,000 ரூபாய் தருவதாக கூறி வங்கிகணக்கை பயன்படுத்தி 3.25 கோடி மோசடி.

புதுச்சேரி :  சாராயம் வாங்கி கொடுத்து, குடிமகனிடம் புதிய தொழில் துவங்க போவதாகவும், ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் கொடுத்தால், மாதம், 1,000 ரூபாய் தருவதாக கூறி வங்கிகணக்கை பயன்படுத்தி 3.25 கோடி மோசடி செய்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறையினர்  ரூ.3.25 கோடி மோசடி வழக்கில், பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கின் உரிமையாளரை தேடி புதுச்சேரி சென்றனர். அந்த நபரின் செல்போன் சிக்னலை போலீசார் பின் தொடர்ந்து, நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள சாராயக்கடைக்கு சென்றனர். அங்கு, போனை டயல் செய்தபோது, போதையில் மயங்கி கிடந்த நபரின் சட்டையில் போன் ஒலித்தது. அந்த நபரை போலீசார் பிடித்தனர்.

நீங்க  ஏன் சார் காமெடி பண்றீங்க...

போதை ஆசாமியிடம், நாங்கள் தமிழக சைபர் கிரைம் போலீஸ். உன்னை 3.25 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்கிறோம்' என்று கூற, அந்த ஆசாமி, நான் 10 ரூபாய்க்கு வழியில்லாமல் சாராயக்கடையில் படுத்து கிடக்கிறேன். நீங்க  ஏன் சார் காமெடி பண்றீங்க... என்றார்.

பின், தமிழக போலீசார் அவரிடம் முழு விசாரணை நடத்திய போது, திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. குடிமகன் சில மாதங்களுக்கு முன் சாராயம் குடிக்க பணமின்றி, சாராயக்கடையில் சுற்றி வந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர் அவருக்கு சாராயம் வாங்கி கொடுத்துள்ளார்.

குடிமகன்களிடம் முக்கிய ஆவணங்களை சுருட்டிய மர்ம நபர்

பின், அந்த நபர், அவ்வப்போது சாராயம் வாங்கி கொடுத்து, அடுத்த சில தினங்களுக்கு பின் அந்நபர், குடிமகனிடம் புதிய தொழில் துவங்க போவதாகவும், ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் கொடுத்தால், மாதம், 1,000 ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.

அதை நம்பிய குடிமகன், தன் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு நகலை கொடுத்துள்ளார். அது தற்போது வினையாகி உள்ளது. இவரது வங்கிக் கணக்கில், மோசடி நபரால் ரூ.3.25 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. தமிழக போலீசார், புதுச்சேரி குடிமகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை... 

பொதுமக்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை (ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் பிற ஆவணங்களை) பயன்படுத்தி பழக்க வழக்கத்தின் பேரில் எவருக்கும் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி தரக்கூடாது.

வங்கி கணக்கை கொடுத்தால் மாதம் தோறும் பணம் தருவதாக யாரேனும் கூறினால், அதனை நம்ப வேண்டாம். அடையாளம் தெரியாதவர்களிடம் உங்கள் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை கொடுத்தால், அதனை அவர்கள் 'டார்க் நெட்' இணையதளத்திற்கு பெரும் தொகைக்கு விற்றுவிடுவர்.

அந்த வங்கி கணக்குகளை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தினால், நீங்கள் கைதாக நேரிடும். இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களிடம் வங்கி கணக்குகளை வாடகைக்கு வாங்கி, சைபர் குற்றவாளிகளுக்கு விற்பது அதிகரித்து வருவதால், பொதுமக்கள் உஷராக இருக்க வேண்டும்.

சைபர் கிரைம் தொடர்பான புகார் மற்றும் தகவல் பெற விரும்புவோர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 அல்லது 0413 2276144, 9489205246 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது https://cybercrime.gov.in/என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா,  விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா, விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா,  விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா, விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி - 11 மணி வரை இன்று
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
பெங்காலி நடிகை மீது முரட்டு காதல்..கமல் செய்த செயல்...அப்பாவைப் பற்றிய உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்
பெங்காலி நடிகை மீது முரட்டு காதல்..கமல் செய்த செயல்...அப்பாவைப் பற்றிய உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்
3BHK படம் பார்த்த சச்சின் டெண்டுல்கர்...என்ன சொல்லியிருக்கார் தெரியுமா!
3BHK படம் பார்த்த சச்சின் டெண்டுல்கர்...என்ன சொல்லியிருக்கார் தெரியுமா!
Embed widget