கள்ளக்காதலில் பிரேக் அப்; காதலியை கட்டிப் பிடித்து தற்கொலை முயற்சி...!
திண்டுக்கல் அருகே வாலிபர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு கள்ளக்காதலியையும் கட்டிப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்தவர் சந்துரு (வயது 23). இவரது உறவினர் திண்டுக்கல் சாணார்பட்டி அருகே தவசிமடை வாடிப்பட்டி காலணியில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வாசிமலை என்பவரது மனைவி புவனேஸ்வரி (30) என்பவரும் வசித்து வருகிறார். வாசிமலை கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இதனால் புவனேஸ்வரி அவரது 3 பெண் குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் சந்துரு அவரது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது அவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் புவனேஸ்வரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் உல்லாச பறவைகளாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென புவனேஸ்வரி சந்துருவுடன் பழகும் பழக்கத்தை தவிர்த்துள்ளார்.
தேனி : “அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர்” : ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
இதனால் ஆத்திரமடைந்த சந்துரு நேற்று இரவு புவனேஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்துரு தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை அவரது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அந்த சமயம் அருகே நின்று கொண்டிருந்த புவனேஸ்வரியையும் கட்டி பிடித்துள்ளார். இதனால் புவனேஸ்வரி செய்வதறியாது திகைத்ததில் அவரது உடலிலும் தீப்பற்றியது. உடனே அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்காக இளைஞர் உடலில் தீ வைத்துக் கொண்டு கள்ளக் காதலியையும் கட்டிப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்