மேலும் அறிய
Advertisement
திமுக கவுன்சிலரின் பைக்கில் இருந்த நகை, பணம் கொள்ளை - மர்மநபர்கள் எடுத்து செல்லும் காட்சி
அரூரில் திமுக கவுன்சிலரின் இருசக்கர வாகனத்தில் இருந்த 12 பவுன் தங்க நகையும், ரூ.50,000 பணம் திருடுபோனது. காவி வேட்டி அணிந்து வந்த மூவர் எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
தருமபுரி மாவட்டம் அரூர் 7 வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ஜெயலட்சுமியின் கணவர் வெங்கடேசன் பேருந்து நிலையத்தில் குளிர் பானக்கடை நடத்தி வருகிறார். இன்று அரூர் நான்கு ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த தனது 12 பவுன் நகையை மீட்டு, 50 ஆயிரம் பணத்தையும் சிறிய பையில் வைத்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு வங்கியில் இருந்து சிறிது தூரம் உள்ள தனது நண்பரின் கடைக்கு முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார்.
அப்போது அவர் உள்ளே சென்ற ஒரு சில நிமிடத்திற்குள் அவரை பின் தொடர்ந்து வந்த காவி வேட்டி கட்டிய மர்ம நபர்கள் தங்களின் கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்து ஸ்கூட்டியின் சீட்டுக்கடியில் வைக்கப்பட்ட பணத்தையும், 12 பவுன் நகையயும் கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து வண்டியை வந்து பார்த்த வெங்கடேசன், பணம் மற்றும் நகை திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து அரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அருகில் இருந்த கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்பொழுது செல்போனில் பேசியபடி காவி வேட்டி கட்டிய நபர் ஒருவர் வண்டி அருகாமையில் வந்து நிற்கிறார் அவரைத் தொடர்ந்து மற்றொரு நபர் வண்டி கருகாமல் வந்து திடீரென வண்டியின் சீட்டை தூக்கி பையை எடுத்துச் செல்கிறார். அப்பொழுது அதி வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று அவர் அருகில் நிற்கிறது உடனடியாக வண்டியில் இருந்து பையை எடுத்த நபர் இருசக்கர வாகனத்தில் ஏறி செல்கிறார். இதனை தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்த நபரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடு காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூவரும் காவி வேட்டி அணிந்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளை வைத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் இருந்த 12 பவுன் தங்க நகை மற்றும், ரூ. 50,000 பணம் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion