மேலும் அறிய

திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதை பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரானா தொற்றின்  தாக்கம் அதிகமாக இருந்ததால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பித்தது. இந்த நிலையில் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், போன்ற அனைத்து விதமான கடைகளையும் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மதுபான ஆலைகள், கடைகள்  திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்கள் என  சொல்லக்கூடிய திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் போதை பொருள் விற்பனை படுவேகமாக நடைபெற்று வருகிறது. 


திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

கடந்த ஒரு ஆண்டுகளாக அதிக அளவில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை, போதை ஊசி பழக்கங்கள் டெல்டா மாவட்டத்தில் அதிக அளவில் இளைஞர்கள் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளது என திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது, இந்த டெல்டா பகுதிகளுக்கு வரும் போதைப்பொருள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வருவதாகவும் அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்து எடுத்து செல்லப்படுகிறது அதை சிலர் தங்களது இல்லத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர் கடைகளில்  வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றை அனைத்தையும் முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறை அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக  தெரிவித்தார். மேலும் தினமும் டெல்டா மாவட்டங்களில் குறைந்தது 5 கிலோ முதல் 10 கிலோ வரை கஞ்சா போன்ற  போதைப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி வருகிறார்கள். விற்பனை செய்தவர்களின்  மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சி ராம்ஜி நகர், திருவாரூர், நாகை போன்ற இடங்களில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை போதைக்கு அடிமையாகிய இளைஞர்களை மீட்டு அவர்களின் பெற்றோர்களை அழைத்து போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற செயல்களிலும் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.  திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

மேலும் ”முதல்கட்டமாக திருச்சி மத்திய மண்டலத்தில் உட்பட்ட மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள், பயில்கின்ற மாணவ மாணவியர் மற்றும் கல்லூரி செல்லும் இளைஞர்கள் ஆகியோர் புகையிலை பழக்க வழக்கங்களுக்கு ஆட்படுவதை தடுக்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சிறு வணிகத்தில் ஈடுபடும் பெட்டி கடைகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தங்களது கடைகளில் சிகரெட், புகையிலை மற்றும் பிற போதைப் பொருட்கள் விற்பனை செய்தால்  தடுப்பு சட்டம் பிரிவின்படி கல்வி நிறுவனங்களின் அருகே 100 மீட்டர் தொலைவிற்குள் செயல்படும் சிறு பெட்டி கடைகள் மற்றும் சில்லறை வியாபாரக் கடைகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிகரெட், குட்கா, பான்பராக் மற்றும் இதர போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. குறிப்பாக  18 வயதுக்கு குறைவான உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தால்  குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் படி பிணையில் வர முடியாத படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம் செலுத்த உட்படுத்தப்படுவார்கள்” என மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


திருச்சி : அச்சமூட்டும் போதை பொருள் அதிகரிப்பு : இளைஞர்களை குறிவைக்கும் கூட்டம்..! தீர்வு என்ன?

மேலும் ”போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களை அவர்களின்  பெற்றோர்கள் தான் முக்கிய பங்கெடுத்துக் தடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு அறிவுரைகள் கூறி, பழக்கவழக்கங்களையும்,  நண்பர்களின்  சேர்க்கை எவ்வாறு உள்ளது என்பதையும் நன்கு அறிந்து அவர்களுக்கு அவ்வப்போது பெற்றோர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்” என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Embed widget