பளார்.. போலீசுக்கு கன்னத்தில் அறை விட்ட இளம்பெண் - டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்..!
டெல்லியில் பட்டப்பகலில் நடுரோட்டில் சீருடையில் இருந்த ஆண் காவலரை பெண் ஒருவர் பளார் என்று கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் அவ்வப்போது பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். வழக்கமாக சாலையில் தகராறு செய்யும் நபர்களை காவல்துறையினர் விளாசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், டெல்லியில் அரங்கேறியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காவலருக்கே பளார்:
டெல்லியில் கார் ஒன்றை இளம்பெண் ஓட்டி வந்துள்ளார். அப்போது, அவருக்கும் அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த ஆண் காவலருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இந்த வாக்குவாதத்தின்போது காரில் இருந்து இறங்கிய பெண் அந்த ஆண் காவலரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் சிலர் அந்த பெண்ணை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அந்த பெண் சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால், அந்த பெண் யாரும் எதிர்பாராத விதமாக அந்த காவலரை நடுரோட்டில் அனைவரின் முன்பும் பளார் என்று கன்னத்தில் அறைவிட்டார்.
வைரலாகும் வீடியோ:
இதைக்கண்டு அங்கிருந்த மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும், அந்த ஆண் காவலர் அந்த பெண்ணை அப்போதும் எச்சரித்து மட்டுமே அனுப்பினார். அந்த பெண் காவலரை ஏதோ திட்டிவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இந்த சம்பவம் எதற்காக நடந்தது? டெல்லியில் சரியாக எங்கு நடந்தது? என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.
Kalesh b/w A Woman and on-Duty Police officer on Roadpic.twitter.com/lMIaX3eSk6
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 8, 2023
ஆனால், இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சீருடையில் உள்ள காவலரை கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், அந்த பெண்ணை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். கார் எண்ணை வைத்து போலீசார் அந்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரணம் என்ன?
அந்த பெண் என்ன காரணத்திற்காக அறைந்தார்? என்று சிலரும், பெண் என்பதாலே அந்த காவலர் அந்த பெண்ணை பதிலுக்கு தாக்கவில்லை என்றும், பெண் என்பதை இதுபோன்று தவறாக சிலர் பயன்படுத்துகின்றனர் என்றும் பலவிதமான கருத்துக்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர். சீருடையில் இருந்த காவலரை பெண் ஒருவர் நடுரோட்டில் அறைந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க:Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!
மேலும் படிக்க: Jailer First Review: ‘ஜெயிலர் படம் வேற லெவல்’ .. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் விமர்சனம்..!