CRIME: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் கிடந்த சடலம்! ரயில்வே போலீசார் அலட்சியமா?
செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள டிக்கெட் கவுன்டரில் பல மணி நேரம் கிடந்த சடலத்தை அப்புறப்படுத்தாமல் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட் கவுண்டர் வாசலில் பிணம்
பெரும்பாலானோர் பொதுப்போக்குவரத்தை நம்பி இருக்கும் நிலையில், அவர்களுக்கு ரயில் போக்குவரத்து மிக முக்கிய போக்குவரத்தாக உள்ளது. அதேபோன்று தென் மாவட்டத்தை நோக்கிச் செல்லக்கூடிய ரயில்களும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய செங்கல்பட்டு ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாக உள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் இடத்தில் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில் சடலம் இருந்தது. முதல் இரண்டு கவுண்டர்களில் பொதுமக்கள் டிக்கெட் பெற்று சென்ற நிலையில் முன்பதிவு மையத்தில் சடலம் இருந்தது.
ரயில்வே போலீசார் அலட்சியமா?
தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் ?
இரண்டு காவல் நிலைய எல்லைகள் சந்திக்கும் இடத்தில் நடைபெறும், குற்ற சம்பவங்கள் தொடர்பாக வழக்கு எடுப்பதில் காவல் நிலையத்திற்கு இடையே அவ்வப்பொழுது பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போன்று ரயில்வே போலீசார் மற்றும் தமிழ்நாடு போலீசார் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன.
செங்கல்பட்டு பொருத்தவரை செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் ஆகிய இருவருக்கும் அவப்பொழுது இந்த எல்லை பிரச்சினை ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் பட்சத்தில், குற்ற சம்பவங்களை குறைப்பது மட்டுமில்லாமல் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யவும் உறுதுணையாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.