மேலும் அறிய

Cyber Crime: போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்; சைபர் கிரைமில் குவியும் புகார்கள்..!

புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வளைதலங்களில் பதிவிட்டு மிரட்டும் பண மோசடி கும்பல். தேனி மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குவியும் புகார்கள்.

தமிழகத்தில் கடன் செயலிகளால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏராளமான பெயர்களில் கடன் செயலிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், மக்களுக்கு எளிய முறையில் சிறுகடன்களை இதுபோன்ற செயலிகள் வழங்கி வருகின்றன. செல்போன் பயன்படுத்தும் மக்கள் தங்களின் அவசர தேவைக்கு இதுபோன்ற கடன் செயலிகளில் கடன் வாங்கி வருகின்றனர். அவ்வாறு வாங்கும் கடன் தொகையை சில நாட்களில் திருப்பி செலுத்தியும் வருகின்றனர்.

Cyber Crime: போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்; சைபர் கிரைமில் குவியும் புகார்கள்..!

அவ்வாறு கடனை திருப்பி செலுத்திய போதிலும் சில கடன் செயலிகளின் பெயரில், கடன் பெற்றவர்களை மிரட்டி மர்ம நபர்கள் பணம் பறிக்கும் செயல்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தேனியில் வர்த்தகம் செய்யும் ஒருவர், கடன் செயலி மூலம்  பெற்ற கடன் தொகையை செலுத்திய போதிலும், அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவருக்கே அனுப்பி பணம் கேட்டு சிலர் மிரட்டினர். இதுதொடர்பாக தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மராட்டியத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த கும்பலின் தலைவன் மலேசியாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cyber Crime: போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்; சைபர் கிரைமில் குவியும் புகார்கள்..!

அதேநேரத்தில் இதுபோன்ற கடன் செயலிகளில் கடன் பெற்ற பலரின் புகைப்படங்களையும், அவர்களின் செல்போனில் சேமித்து வைத்துள்ள குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும் மார்பிங் செய்து அனுப்பி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க குவிந்து வருகின்றனர். கடன் செயலியில் கடன் வாங்கி பணத்தை திருப்பி செலுத்திய பின்பும், வக்கிரமான செயல்பாடுகளுடன் மீண்டும் பணம் பறிக்க முயற்சி செய்யும் கும்பல் தொடர்பாக தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை புகார் கொடுத்துள்ளனர்.

Cyber Crime: போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்; சைபர் கிரைமில் குவியும் புகார்கள்..!

அந்த புகார்கள் மீது சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் அரங்கநாயகி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற கடன் செயலிகளில் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு கடன் பெற்றவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டால் தாமதமின்றி சைபர் கிரைம் காவல் நிலையம் அல்லது அருகில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வேண்டும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Embed widget