மேலும் அறிய
Advertisement
விமானத்தில் வந்த 23 கொடிய விஷப்பாம்புகள்..! அலறி அடித்து ஓடிய சுங்கத்துறை அதிகாரிகள்..! என்னதான் நடந்தது?
23 விஷப் பாம்புகளையும், மீண்டும் மலேசிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப சுங்க அதிகாரிகள் முடிவு. அதற்கான செலவை, கடத்தல் பெண் பயணியிடம் வசூலிக்க அதிகாரிகள் திட்டம்.
மலேசிய நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், கொடிய விஷம் உடைய 23 பாம்புகளை, இரண்டு கூடைகளுக்குள் வைத்து கடத்தி வந்த பெண் பயணியை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
23 பாம்புகள்:
மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பெண் பயணி, சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியா நாட்டிற்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்திருந்தார். இதை அடுத்து அந்தப் பயணியின் உடமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனார். அந்தப் பெண் பயணி இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகள் எடுத்து வந்திருந்தார். அதிகாரிகள் கூடைகளை திறந்து பார்த்து, பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இரண்டு கூடைகளுக்குள்ளும் சிறியதும் பெரியதுமாக, 23 உயிருடன் கூடிய பாம்புகள் நெளிந்து கொண்டு இருந்தன. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அலறி அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினார்கள்.
எந்தவித ஆவணமும் இல்லை
ஆனாலும் சில துணிச்சலான அதிகாரிகளும், சுங்கத்துறை சிப்பாய்களும் சேர்ந்து கொண்டு, அந்தப் பெண் பயணியிடம் விசாரணை நடத்தினர். அவர் மிகவும் அலட்சியமாக, இவைகள் எல்லா உயிரினங்களையும் போல, ஒரு உயிரினங்கள். இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார். ஆனால் சுங்க அதிகாரிகள், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, இதைப் போன்ற உயிரினங்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு, சர்வதேச வன உயிரின பாதுகாப்பு பிரிவின் அனுமதி வாங்க வேண்டும்.
அது மட்டுமின்றி இந்திய வன உயிரின பாதுகாப்பு பிரிவின் அனுமதியும் வாங்க வேண்டும். மேலும் இதைப் போன்ற விலங்குகளை இந்தியாவுக்குள் எடுத்து வருவதற்கான காரணங்களும் குறிப்பிட வேண்டும் என்று எடுத்துக் கூறி, அதற்கான ஆவணங்கள் எங்கே என்று கேட்டனர். ஆனால் அந்த பெண் பயணி, எந்தவித ஆவணமும் இல்லை என்று அலட்சியமாக பேசினார்.
கொடிய விஷம்
இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அந்த பெண் பயணியை வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்தனர். 23 பாம்புகளையும் மீண்டும் கூடைகளில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வனவிலங்கு உயிரினங்கள் குற்றப்பிரிவு அதிகாரிகளும் தகவல் கொடுத்தனர். இதை அடுத்து வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகள் வந்து, விசாரணை மேற்கொண்டனர். அதோடு அந்தப் பாம்புகளை ஆய்வு செய்தனர். இந்தப் பாம்புகள் அனைத்தும், ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காட்டுக்கு வசிக்கும் கொடிய விஷம் உடைய பாம்புகள் என்று தெரிய வந்தது.
பெண் பயணியிடம் வசூலிக்க
இந்த பாம்புகளில் நோய்க்கிருமிகள் பெருமளவு பரவி இருக்கும். இவைகளை நம் நாட்டுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய்கள், நம் நாட்டில் பரவி விடும். மனிதர்களுக்கும், விலங்கின வகைகள் வகைகளுக்கும், பெரும் ஆபத்து ஏற்படும். எனவே இந்த பாம்புகள் அனைத்தையும், எந்த நாட்டில் இருந்து வந்ததோ அதே நாட்டுக்கு, எந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்ததோ, அதே விமானத்தில் திருப்பி அனுப்ப வேண்டும்.
அதற்கான பணத்தை கடத்தி வந்த பெண் பயணியிடம் வசூலிக்க வேண்டும். அதோடு இந்தப் பெண் பயணியை கைது செய்து, இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பவர் யார் விசாரணை நடத்தி, அவர்களையும் கைது செய்ய அறிவுறுத்தினர். இதையடுத்து சுங்க அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்தனர். பாம்புகளை நாளை காலை ஏர் ஏசியா விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர் செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion