மேலும் அறிய
Advertisement
17 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - கல்லூரி தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
’’வாடகை ரூம் எடுத்து தங்கிய போது அங்கு கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து மயங்கிய தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்’’
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 17 வயது இளம்பெண் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார் இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் திடீரென்று பண்ருட்டி சென்னை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார் இதில் பலத்த காயமடைந்த இளம்பெண்னை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பண்ருட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அதன்பின்பு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், இதுகுறித்து பண்ருட்டி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குடும்பத்தில் பிரச்சினை காரணமாக அண்ணன் திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக இளம்பெண் தெரிவித்தார். மேலும் காயப்பட்டவர் மாணவி என்பதால் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் கடலூர் அரசு மருத்துவமனையில் நேரில்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் இளம்பெண் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போது மாணவி கூறியதாவது, தான் நர்சிங் படித்து வருவதால் மருத்துவம் சம்பந்தமான பயிற்சிகள் தேவை என்பதால் கல்லூரி சார்பில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பார்கள். இந்தநிலையில் கடந்த மாதம் மூன்றாம் தேதி ஏற்காடு பகுதியில் பயிற்சிக்குச் செல்ல கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி என்கின்ற நிஷா கூறியதன் பேரில் கல்லூரி மாணவ, மாணவிகள், நர்சிங் பயிற்சி பெரும் பெனிடிக், சுகன்யா நர்சிங் பயிற்சி கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் நெய்வேலி தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன் நர்சிங் கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி ஆகியோருடன் ஏற்காடு சென்றோம் அங்கு பயிற்சி ஏதும் கொடுக்கவில்லை மாறாக ஒரு வாடகை ரூம் எடுத்து தங்கிய போது அங்கு என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து கல்லூரி உரிமையாளர் டேவிட் மற்றும் பணியாளர்கள் அன்பு பிரேம் ஆகியோர் தன்னை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்தனர். இதையடுத்து மது மயக்கத்தில் மயங்கிய தன்னை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தான் ஏற்காட்டில் இருந்து காரில் பண்ருட்டி வந்தடைந்தேன் அப்பொழுது என்னுடன் படித்த சக மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி விட்டு வீட்டுக்குச் சென்றேன் இதனை அறிந்த எனது சகோதரர் என்னிடம் சரியாக பேசாமல் வருத்தத்தில் இருந்தார் இதனால் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயன்றேன் என காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து மகளிர் காவல் ஆய்வாளர் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன் கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகிய நால்வர் மீதும் போஸ்கோ வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் பர்க்கத்பீவி மற்றும் அன்பழகன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் மேலும் தப்பி ஓடிய டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சுற்றுலா என கூறி அழைத்து சென்று கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு செய்த சம்பவம் அப்பதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion