மேலும் அறிய

Crime : மனைவியின் மாதவிடாய் ரத்தத்தை விற்ற கணவர், மாமியார்.. அகோரி பூஜைக்காக செய்த பகீர் செயல்..

அகோரி பூஜைக்காக ஒரு பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : அகோரி பூஜைக்காக ஒரு பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நவீன காலத்திலும் மாந்திரீகம், அகோரி பூஜை என்று பலர் நம்பி வருகின்றனர். நம்புவது மட்டுமின்றி பலரை இதில் ஈடுபடுத்தி அவர்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். மேலும் மாந்திரீகத்திற்காக குழந்தைகள் உட்பட  பலர் இதற்கு உயிரிழக்கின்றனர். உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ எதாவது பிரச்சனை இருப்பவர்கள்,  இதை செய்தால் சரியாகும் என்ற மூட நம்பிக்கையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தற்போது புனேவில் நடந்துள்ளது.

கணவர் கொடுமை

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்கள் கழித்து அவரது கணவர், மாமியார் மற்றும் மாமனார் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பொறுத்து பொறுத்து பார்த்திருந்த அந்த பெண் ஒரு கட்டத்தில் அவரது பெற்றோரிடம் இது பற்றி தெரிவித்தார்.

பின்னர், அவரது பெற்றோருடன் காவல்நிலையம் சென்று புகார் அளித்தார்.  வரதட்சணை கேட்டு தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

கட்டிவைத்து, மாதவிடாய் ரத்தத்தை எடுத்த கொடூரம்

அதில், ”மாதவிடாயின்போது  தனது கை, கால்களை கட்டிபோட்டு ரத்தத்தை  சேகரித்து அதனை அகோரி பூஜை மற்றும் மாந்திரீக பூகைக்காக தனது மாமியார் கணவர் எடுத்து செல்வார்கள். இதனையே பல மாதங்களை வழக்கமாக வைத்திருந்தனர். இதற்கு மாமனார், மைத்துனர் என பலர் இதற்கு உடந்தைகயாக இருந்து வந்தனர். தனது மாதவிடாய் ரத்தத்தை எடுத்து மந்திரவாதியிடம் ரூ.50 ஆயிரத்தை விற்பனையும் செய்ததாக" பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மாமியார் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை

மேலும், மகாராஷ்டிரா மாநிலம் மகளிர் ஆணையத்தின் தலைவி ரூபாலி சகங்கர் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் அகோரி பூஜைக்காக பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இது மனித குலத்தையே களங்கப்படுத்திய அவமானமான சம்பவம்.

இதுபோன்ற குற்றங்களில் இருந்த பெண்களை பாதுகாக்கவும், சமூகத்தில் அவர்களை வலுப்படுத்தவும் இன்னும் எவ்வளவு போராட்டம் அவசியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

மேலும் படிக்க

Crime: கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்ட பெண்.. மின்கம்பத்தில் கட்டிப்போட்டு சித்திரவதை.. குமரியில் கொடூரம்..

தலைப்பு செய்திகள்

ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget