மேலும் அறிய

Crime: ஓட்டலில் ஒரே அறையில் தங்குவதற்கு 'நோ' சொன்ன காதலி..! ஆத்திரத்தில் கொலை செய்த காதலன்..! நடந்தது என்ன..?

ஓட்டலில் ஒரே அறையில் தங்குவதற்கு மறுப்பு தெரிவித்த காதலியை, காதலனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்ணுக்கு தெரிந்த நபர்களாலேயேதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசம் காசியாபாத் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

காதலி கொலை

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். அதே பகுதியைச் சேர்ந்த ரச்சனா என்ற பெண்ணை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அப்படிதான் ஒரு நாள் அதாவது டிசம்பர் 25-ம் தேதி இரவு சந்தித்தார். அவர்கள் காசியாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து தான் புறப்படுவதாக கௌதமிடம், ரச்சனா கூறினார்.

இதற்கு கௌதம் தன்னுடம் இரவு தங்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கு அந்த இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில் ரச்சனாவை, கௌதம் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பிறகு தன்னுடன் தங்க மறுத்த ஆத்திரத்தில் ரச்சனாவை, கௌதம் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

தங்க மறுத்ததால் ஆத்திரம் 

அடுத்த நாள் காலை, ஹோட்டல் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்ய வந்தபோது, அந்த பெண்ணின் உடல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி  அடைந்தனர்.  பின்பு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியான கௌதமை போலீசார் கைது செய்தனர். பின்பு, ” நானும் ரச்சனாவும்  கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்ததாகவும், ரச்சனா தன்னுடன் ஹோட்டலில் தங்க மறுத்ததால், ரச்சனாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும்” கௌதம் போலீஸில் வாக்குமூலம் அளித்ததார்.  

மற்றொரு சம்பவம்

சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரேஷாமி சாஹு(26). இவர் அதே பகுதியில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே காதலி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக ரேஷாமி சாஹுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கு சண்டை ஏற்பட்டது. இதுகுறித்து இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. 

அப்போது தம்தாரி மாவட்டத்தில் டீக்கடையில் மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் நீடித்த நிலையில், ரேஷாமி சாஹு ஆத்திரமடைந்து அருகில் இருக்கும் ஒரு கட்டையை எடுத்து பெண்ணின் தலையில் அடித்துள்ளார். கட்டையால் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதனால் பலத்த காயமடைந்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷாமி சாஹு என்பவரை கைது செய்தனர். 

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget