(Source: ECI/ABP News/ABP Majha)
திருவண்ணாமலை மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை
திருவண்ணாமலையில் தனியார் மருத்துவமனை மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை 50 ஆயிரம் பணம் கொள்ளை.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த தாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு வயது (30). இவர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகிறது. மருத்துவர் பாபு திருவண்ணாமலை அடுத்த சீரிந்தல் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி மனைவியுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டை பூட்டி விட்டு மனைவி அஸ்வினியுடன் சொந்த ஊரான தாயனூர் கிராமத்திற்கு சென்ற மருத்துவர் பாபு இன்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர் பாபு உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த துணிகள் களைத்து கீழே வீசப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து மருத்துவர் பாபு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் மருத்துவர் பாபின் வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்பொழுது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த துணிகள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளடிக்கப்பட்டு இருந்தது. மேலும் புதியதாக வாங்கி வைத்திருந்த எல்இடிடிவி உள்ளிட்ட இவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன உடனதியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வீட்டின் கதவு இரும்பு கேட் உள்ளிட்டவற்றிலிருந்து கைரேகையும் தடயங்களையும் சேகரித்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை எல்லைக்கு மீண்டும் கொள்ளையரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது கடந்த வாரம் வேங்கிக்கால் பகுதியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் போட்டு உடைத்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது, இதேபோன்று திருவண்ணாமலை ரிங் ரோட்டில் உள்ள அரசு குடியிருப்பு வளாகத்தில் கடந்த நான்காம் தேதி வீட்டின் உடைத்து 18 பவுன் நகைகள் வெள்ளிப் பொருட்கள் மர்மன் அவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தற்போது மீண்டும் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது அப்பகுதி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை நகரில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் நகர் பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.