மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: சொகுசு காரில் 1000 மதுபானங்கள் கடத்தல்; 2 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி
காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் கடத்திய ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு குறைந்த விலைக்கு மது பாட்டில்கள் பல்வேறு பகுதிகளில் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்படி 10 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் உள்ளிட்ட அந்தந்த காவல் சரகத்திற்கு உட்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். லாப நோக்கோடு கடத்தல்காரர்கள் கடத்தி வரப்படும் மது பாட்டில்கள் மற்றும் விஷ சாராயத்தினை பறிமுதல் செய்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நாகை மாவட்ட காவல் துறை தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இன்று வரை சோதனை சாவடிகள் வழியே புதுவையில் இருந்து நாகை கடத்தி வரப்பட்ட 610 லிட்டர் பாண்டி வெச சாராயம் மற்றும்1500 மது பாட்டில்கள் நான்கு இருசக்கர வாகனம் இரண்டு நான்கு சக்கர வாகனங்களை கைப்பற்றி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 14 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரம் புதுக்கடை பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் நாகப்பட்டினம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் நாகப்பட்டினம் மருந்து கொத்தளரோடு பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த், மன்னார்குடி பூக்காரத்தெருவை சேர்ந்த பெருமாயி என்பது தெரியவந்தது. இதன் பின்னர் தனிப்படை போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion