Crime : 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. புதுச்சேரியில் பள்ளி காவலாளி கைது...என்ன நடந்தது?
Crime : எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
Crime : எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி : காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசின் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இங்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக காவலாளியாக தரகம்பட்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் காவலாளியான முகமது அலி என்பவர் வழக்கம்போல் அதிகாலையில் மாணவர்கள் தங்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு இருக்கும் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த 8-ஆம் வகுப்பு மாணவி அலறினார். இதனை கேட்ட சக மாணவர்கள் அங்கு வந்தனர். உடனே காவலாளியான முகமது அலி என்பவர் உடனே அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
பின்பு, இந்த சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த மாணவியின் பெற்றோர் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டுச்சேரி போலீசார் முகமது அலியை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் முகமது அலியை அடைத்தனர்.
பள்ளியிலேயே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, சில நாட்களுக்கு முன்புபெங்களூருவில் 15க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியரை காவல் துறையினர் கைது செய்தனர்.பெங்களூரு, ஹெப்பாலில் உள்ள அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் 54 வயது ஆசிரியர் அஞ்சனப்பா.
இவர் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 15 மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக முன்னதாக புகார்கள் வந்துள்ளன. முன்னதாக இப்பள்ளியில் படிக்கும் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியரின் தவறான அணுகுமுறை குறித்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து இந்தச் சம்பவம் வந்துள்ளதாக ஹெப்பல் காவல் ஆய்வாளர் திலீப் குமார் தெரிவித்துள்ளார்.
உடற்கல்வி வகுப்புகள் மற்றும் மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர் அஞ்சனப்பா தங்களைத் தகாதமுறையில் தொட்டதாகவும், சிலரை முத்தமிட்டதாகவும் பள்ளி மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் அஞ்சனப்பா போக்சோ மற்றும் சட்டப்பிரிவு 354-இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க