மேலும் அறிய

Crime: ஜல்லிக்கட்டு காளைக்காக உறவினர்கள் இடையே மோதல்; ஒருவர் கொலை - 2 பேர் கைது

ஜல்லிக்கட்டு காளைக்காக உறவினர்கள் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம்,  லால்குடியை அடுத்த பூவாளூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 50). இவர் தற்போது தனது மனைவி லட்சுமியின் சொந்த ஊரான திருச்சியை அடுத்த புங்கனூர் கிராமத்தில் கீழத்தெருவில் வசித்து வந்தார். ராம்ஜிநகரில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த அவர் தற்போது ரேசன் கடையில் தற்காலிக ஊழியராக இருந்தார். அதுமட்டுமின்றி கிடைக்கும் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இவர்களுக்கு பிரசாந்த் (27) என்ற மகன் உள்ளார். ஜல்லிக்கட்டில் அதிக ஆர்வம் கொண்ட பிரசாந்த் ஜல்லிக்கட்டு காளையும் வளர்த்து வருகிறார். இதேபோல் அவர்களது உறவினர்களான புங்கனூர் மேலத்தெருவை சேர்ந்த முத்துவீரன் மகன்கள் சரத் குமார் (26), ரஞ்சித் (24) ஆகியோரும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறார்கள். இதற்கிடையே நேற்று இரவு 10 மணி அளவில் புங்கனூர் அல்லித்துறை மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பு பிரசாந்த் தனது தந்தை தமிழரசனுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்களான சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரும் பிரசாந்தை பார்த்து நீ என்ன ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறாய்? உனது காளை ஆட்டுக்குட்டி போல உள்ளது. உனது மாட்டை எளிமையாக அடக்கி விடுவோம் என்று கேலி, கிண்டலாக பேசியுள்ளனர். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பிரசாந்த் அவர்களை கடுமையாக கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனை தடுக்க வந்த தமிழரசனுக்கு நெஞ்சில் பலத்த அடி விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்து விழுந்தார்.


Crime: ஜல்லிக்கட்டு காளைக்காக உறவினர்கள் இடையே மோதல்; ஒருவர் கொலை - 2 பேர் கைது

மேலும் உடனடியாக அவரை மகன் பிரசாந்த் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தமிழரசன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரசாந்த் மற்றும் பூவாளூரை சேர்ந்த அறிவழகன் ஆகியோர் சோமரசம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். மேலும் கொலையுண்ட தமிழரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரணை மேற்கொண்டு சகோதரர்களான சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு காளைக்காக உறவினர்கள் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
Embed widget