குடும்ப தகராறுக்குப் பின் விபரீதம்.. வீடியோ கால் செய்து தீக்குளித்த கணவர்.. சென்னையில் பரபரப்பு..
மனைவிக்கு வீடியோ கால் செய்த கணவர், குளிர்பானத்தில் எலி மருந்து ஊற்றி குடித்தப்படி பேசி இருக்கிறார். மேலும், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குடும்ப பிரச்னை காரணமாக தன்னுடன் வாழ மறுத்த மனைவிக்கு வீடியோ கால் செய்து, மனைவி பார்த்து கொண்டிருக்கும்போதே கணவன் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பெரம்பூர் பகுதியயைச் சேர்ந்தவர் ராஜேஷ் (39). அவரது மனைவில் கல்பனா (38). இருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜேஷ் தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்களுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
தனது அம்மா வீட்டில் இருந்த மனைவியை தன்னுடன் வந்து வாழுமாறு ராஜேஷ் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், வர மறுத்த கல்பனா இனி தொடர்ந்து ஒன்றாக வாழ முடியாது என தெரிவித்திருக்கிறார். இதனால், மனம் உடைந்த ராஜேஷ், தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கல்பாக்கம் குன்னத்தூரில் உள்ள ஏரிக்குச் சென்றுள்ளார். அப்போது கல்பனாவுக்கு வீடியோ கால் செய்த அவர், குளிர்பானத்தில் எலி மருந்து ஊற்றி குடித்தப்படி பேசி இருக்கிறார். மேலும், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால், பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வந்தவரை அக்கம் பக்கத்தினர் பார்த்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் காவல் துறையினர், ராஜேஷின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனைவிக்கு வீடியோ கால் செய்தபடி விஷம் குடித்து, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்
Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours)
State suicide prevention helpline – 104 (24 hours)
Call Pychosocial helpline – 022-25521111
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்