Crime : மார்க் ஷீட் தர மாட்டியா? ஓட ஓட பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் மாணவர்... கல்லூரி வளாகத்தில் பரபரப்பு...!
மார்க் ஷீட் தராமல் காலத்தாமதம் செய்ததால் கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி முன்னாள் மாணவர் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime : மார்க் ஷீட் தராமல் காலத்தாமதம் செய்ததால் கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி முன்னாள் மாணவர் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரசேத மாநிலம் இந்தூரில் பிஎம் ஃபார்மசி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் விமுக்தா சர்மா என்ற 50 வயதுடைய பெண். இந்தக் கல்லூரியில் படித்து இரண்டு ஆண்களுக்கு முன் அசுதோஷ் ஸ்ரீவத்சவா (23) என்ற மாணவர் வெளியேறினார். இவர் ஒரு செயல்முறை தேர்வில் அரியர் வைத்திருந்ததாக கல்லூரி நிர்வாகம் கூறியது. ஆனால் அதை கடந்த அக்டோபர் மாதத்தில் எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவருக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாததால் அவருக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் பல நிறுவனங்களுக்கு வேலை தேடி சென்றுள்ளார். வேலை தேடி சென்ற நிறுவனங்களில் சில நிறுவனங்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லையென்றால் கூட பரவாயில்லை மார்க் ஷீட் கட்டாயம் வேண்டும் என்று கூறினர். தனது வேலைக்காக கல்லூரியில் தனது மார்க் ஷீட்டை கேட்டு கடந்த ஒரு ஆண்டாக சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மார்க் ஷீட்டை பல முறை கேட்டும் கல்லூரி முதல்வர் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அசுதோஷ் சர்மா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனால் முதல்வரை பழிவாங்க முடிவு செய்து, நேற்று கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் மீண்டும் மார்க் ஷீட் கேட்டுள்ளார்.
அப்போது முதல்வர் விமுதா சர்மா எப்போதும் போல் அலட்சியமாக பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் அசுதோஷ் ஸ்ரீவத்சவா வைத்திருந்த பெட்ரோலை எடுத்தார். இதனை பார்த்த கல்லூரி ஓட முயன்றுள்ளார். பின்னர், ஓட ஓட கல்லூரி முதல்வர் விமுதா சர்மா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவரது அலறல் சத்தம் கேட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் அவரின் உடல்நிலை மோசமான நிலைமையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், கல்லூரி முதல்வர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த பிறகு, அங்கிருந்து தப்பியோடிய மாணவர் அருகில் இருந்த நீர்வீழ்ச்சிக்கு சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, தற்கொலைக்கு முயன்ற மாணவர் அசுதோஷை மீட்டு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர் ஏற்கனவே இந்த பிரச்சனையில் பேராசிரியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பேராசிரியரை தாக்கிய வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க