மேலும் அறிய

Crime: “குடிக்கும்போது எப்போதும் ஒருமையில் திட்டுவார்” - பைனான்ஸ் ஊழியரை போட்டுத்தள்ளிய நண்பர்கள்

விழுப்புரம் : பைனான்ஸ் ஊழியர் ஒருமையில் திட்டியதால் நண்பர்களே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை குப்புசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் மரியபிரபாகரன் (வயது 32). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் ரெயில்வே மருத்துவமனை அருகில் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மரியபிரபாகரனை அவரது நண்பர்களான விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலை தெற்கு காலனியை சேர்ந்த தியாகராஜன் மகன் பாலா என்கிற பாலமணி (23), பவர்ஹவுஸ் சாலை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி மகன் குகன் (24), விழுப்புரம் பாணாம்பட்டு பாதை அரவிந்த் நகரை சேர்ந்த மோகன் மகன் வல்லரசு (22) ஆகியோர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகள் 3 பேரையும் பிடிக்க விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ஆனந்தன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தியதோடு 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வெளியூருக்கு தப்பிச் செல்ல விழுப்புரத்தில் பதுங்கியிருந்த பாலா என்கிற பாலமணி, குகன், வல்லரசு ஆகியோரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

Crime: “குடிக்கும்போது எப்போதும் ஒருமையில் திட்டுவார்” - பைனான்ஸ் ஊழியரை போட்டுத்தள்ளிய நண்பர்கள்

விசாரணையில், கொலை செய்யப்பட்ட மரியபிரபாகரன், தனது வேலை விஷயமாக பணம் வசூலிக்க செல்லும் இடமெல்லாம் நண்பர்களான பாலா உள்ளிட்ட 3 பேரையும் உடன் அழைத்து செல்வார். அதோடு 4 பேரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது போதை தலைக்கேறியதும் மரியபிரபாகரன் 3 பேரையும் ஒருமையில் திட்டுவாராம். இதன் காரணமாக அவர்கள் 3 பேருக்கும் மரியபிரபாகரன் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டு அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் மரியபிரபாகரன், தனது நண்பர்களான பாலா, வல்லரசு, குகன் ஆகியோருடன் விழுப்புரம் ரெயில்வே மருத்துவமனை அருகே முட்புதரில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்கிடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பாலா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி மரியபிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். உடனே குகனும், வல்லரசுவும் மரியபிரபாகரனின் கை, கால்களை பிடிக்க, பாலா தான் வைத்திருந்த கத்தியால் மரியபிரபாகரனின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார். அவர் இறந்ததும் அங்கிருந்து 3 பேரும் தப்பியோடி விட்டனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாலா, குகன், வல்லரசு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
Embed widget