Crime: பச்சிளம் குழந்தை முகத்தில் தண்ணீர் ஊற்றி கொலை! தாய் செய்த கொடூரம் - கேரளாவில் பயங்கரம்!
Crime: பச்சிளம் குழந்தையின் முகத்தில் தண்ணீரை ஊற்றி மூச்சைத் திணறடித்து தாய் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அருகே மேலவெட்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நீது (20). சுமத்ரா என்ற பகுதியில் இவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒரு ஆண்டாக காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி வெளியே செல்வது வழக்கம். நெருக்கமாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் நீது கர்ப்பம் ஆனார். இந்நிலையில், கடந்த வாரம் இளம்பெண் நீதுக்கு பெண் குழந்தை பிறந்தது.
பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்:
திருமணம் நடைபெறாமல் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்று நினைத்தார் பெண் நீது. அதனால், தனக்கு பிறந்த குழந்தையை கொலை செய்ய முடிவு எடுத்தார். அதன்படியே, குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே, குழந்தையை குளியல் அறைக்கு தூக்கி சென்றார். அங்கு, குழந்தையின் முகத்தில் தண்ணீரை ஊற்றி மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளார்.
கைது:
இந்த சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர, பத்தனம்திட்டா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தையை கொன்றது உறுதியானது. பின்னர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, குழந்தையின் மூக்கில் தண்ணீர் புகுந்ததால் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இளம்பெண் நீதுவை போலீசார் கைது செய்தனர். திருமணம் ஆகாமலேயே குழந்தை பிறந்ததால், அதன் முகத்தில் தண்ணீரை ஊற்றி தாய் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று நடப்பது முதன்முறையல்ல. பல பகுதிகளில் பச்சிளம் குழந்தைகளை தாய் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க