ஆபாச படம், கட்டாய செக்ஸ் - திருமணமாகி 43 நாட்களே.. சென்னை கணவனின் அட்டூழியம், நீதிமன்றம் அதிரடி
Chennai Marriage Dispute: மனைவியை கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ பார்க்க செய்து , உடலுறவு கொண்ட கணவனுக்கு சென்னை நீதிமன்றம் 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Chennai Marriage Dispute: திருமணமாகி 43 நாட்களே ஆன நிலையில் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கணவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மனைவிக்கு கிடைத்த நீதி:
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக, திருமணமாகி 43 நாட்கள் மட்டுமே தன்னுடன் வசித்த மனைவிக்கு, ரூ.5 லட்சம் அபராதம் செலுத்த சென்னையை சேர்ந்த கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடுத்து விட்டு வந்து கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டது, வலுக்கட்டாயமாக ஆபாச படங்களை பார்க்கச் செய்தது, வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதாக கணவனின் குற்றச்சாட்டு மற்றும் வரதட்சணை கொடுமை போன்ற புகார்களின் அடிப்படையில் நடந்த வழக்கின் முடிவில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் பிறகு அந்த பெண்ணை தொடர்புகொள்ள கூடாது என்றும், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உத்தரவிட்டுள்ளது.
43 நாட்கள் மட்டுமே நீடித்த திருமணம்:
கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கில் தொடர்புடைய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது மணமகன் தான் திரைத்துறையில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவர் கமிஷனுக்கான கடன் ஏற்பாடு செய்து தரும் பணி செய்பவர் என்பது திருமணத்திற்கு பிறகு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கேட்டதுமே, மனைவியையும் அவரது குடும்பத்தினரையும், மணமகன் மோசமான வார்த்தைகளால் வசைபாடியுள்ளான். ஆபாச வார்த்தைகளால் விமர்சித்ததோடு, 30 சவரன் நகை மற்றும் ராயல் என்ஃபீல்ட் பைக் போதாது,கூடுதல் வரதட்சனை கேட்டும் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். இதனிடையே, திருமணத்தின் போதே மதுபோதையில் இருந்ததால் ஏற்பட்ட தகராறால், மே மாதம் தான் தனது பிறந்த வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கே சென்றுள்ளார்.
குடும்பமே சேர்ந்து கொடுமை:
புகுந்த வீட்டிற்கு சென்ற ஒரு வாரத்திலேயே கணவன், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து அந்த பெண்னை தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கியுள்ளனர். மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்ப்பது போன்ற உளவு வேலைகளை தொடங்கியுள்ளார். அவரது வாகனத்தை மீண்டும் மீண்டும் சேதப்படுத்தியுள்ளார். மன உளைச்சல் ஏற்பட்டு தனது வீட்டிற்கே சென்றபோது, அங்கேயும் சென்று கணவனின் குடும்பத்தினர் கத்தியை காட்டி மிரட்டியதோடு, வீட்டின் மீது கற்களையும் வீசியுள்ளனர். இதுதொடர்பாக புகாரளித்து விவாகரத்து வழக்கு தொடங்கியபோதும், தொடர்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் விசாரணை
வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூட கணவன் தரப்பினர்,பெண்ணையும் அவரது தாயாரின் குணத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது நீதிபதியையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம், பெண்ணின் தரப்பில் தான் எதிர்கொண்ட மனதளவு மற்றும் உடலளவு கொடுமைகளை விளக்கியது. 12 முறை வழக்கில் வாய்தா வழங்கப்பட்டும் கணவர் தரப்பால், குற்றச்சாட்டுகள் தொடர்பான உரிய ஆதரங்கள் சமர்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, கணவர் குடும்பத்தினர் யாரும் இனி அந்த பெண்ணை அணுகக் கூடாது என சென்னை நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





















