சென்னை : 2 குழந்தைகளை கொன்று தற்கொலை முயற்சி, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு..
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் தன் மகனையும், மகளையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
2 குழந்தைகள் கொலை
இந்த சம்பவத்தில் யாஷி மற்றும் அனுஷ் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். மம்தா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்ததற்கான காரணம் குறித்து மம்தா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாக்குமூலம்
என் கணவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். குடிப்பதை நிறுத்துமாறு நான் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை. இதனால் எங்கள் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மகிழ்ச்சி குறைய ஆரம்பித்தது. நான் தட்டிக்கேட்டதால் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. மறுநாள் காலையில் அவர் என்னுடன் பேசவில்லை. நான் பல தடவை அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டு பேச முயற்சி செய்தேன். ஆனால் அவர் செல்போனில் என்னுடைய அழைப்புகளை எடுக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் இல்லை என்றால் என்னுடைய குழந்தைகள் ஆதரவு இன்றி அனாதைகளாகிவிடும், என்பதால் அவர்களை கொலை செய்துவிட்டு , சர்க்கரை மாத்திரைகளை அதிக அளவு உட்கொண்டு, மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்தேன். கணவரின் குடிப்பழக்கம் என்னை இந்த விபரீத முடிவு எடுக்க வைத்துவிட்டது என வாக்குமூலம் கொடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். 2 குழந்தைகளை கொலை செய்த குற்றம் மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் மம்தா மீது கீழ்ப்பாக்கம் போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்து வழக்கு நடைபெற்று வந்தது.
தண்டனை
இந்த வழக்கு விசாரணை சென்னை செஷன்ஸ் கோர்ட்டில், நீதிபதி ஆனந்த் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கொலை செய்தது உறுதியானதை அடுத்து, பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்'
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் : 104 , ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .