மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Chengalpattu : நடுவழியில் ரயிலை நிறுத்திய இளைஞர்... ஓட்டுநரை தாக்க முயற்சி.. அதிர்ந்த ஸ்டேஷன்.. காரணம் என்ன..?
Chengalpattu Railway Staion: ரயில்வே நிலையம் அருகே என்பதால் , உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் அந்த நபரை, சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
செங்கல்பட்டு ரயில் நிலையம் ( Chengalpattu Railway Staion )
சென்னை புறநகர் பகுதியில், மிக முக்கிய ரயில் நிலையமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான, ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையம் வழியாக வந்து செல்கின்றன. அதேபோன்று செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை ஏராளமான ரயில்களும் இயக்கப்படுகிறது.
தொடர்வண்டியை வழிமறித்த மர்ம நபர்
இந்தநிலையில் சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே வந்த பொழுது , மர்ம நபர் ஒருவர் அந்த ரயிலை மறிக்க முயற்சி செய்துள்ளார். ரயில் நிலையம் அருகே ரயில் வந்ததால், ரயிலும் சற்று மெதுவாகவே வந்துள்ளது. எனவே, எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல், இருக்க வேண்டுமென ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார்.
ஓட்டுனரை தாக்கி - ரயிலை இயக்க முயற்சி
அப்பொழுது, ரயில் ஓட்டுநர் பெட்டியில் ஏறி அந்த நபர் ரயில் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில், ஈடுபட்டுள்ளார். அவரை அதிலிருந்து இறங்குமாறு ஓட்டுனர் கூறிய பொழுது, அவரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ரயிலில் ஏறி ரயில் , ஆரணை (HORN )- யை ஓட்டுனர் ஒலித்து உள்ளார். ரயில்வே நிலையம் அருகே என்பதால் , உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் அந்த நபரை, சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் முன்னுக்கு பின் முரண்
இதனை அடுத்து ரயில்வே போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், அரியலூர் மாவட்டம் வெள்ளந்தை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது, விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட நபர் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதால், மனநல பாதிக்கப்பட்ட நபரா என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இருந்தும் சில சமயத்தில், அந்த நபர் தெளிவாகவும் பேசி வருகிறார். இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை மருத்துவ பரிசோதனைக்கு , உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
இந்தியா
கல்வி
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion