மேலும் அறிய
Advertisement
Crime : சொத்துக்காக இரு தரப்பு மோதல்..! பயங்கரமாக தாக்கிக் கொண்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
மேல்மருவத்தூர் அருகே இரு தரப்பினரிடையே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : மேல்மருவத்தூர் அருகே ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 47).விவசாயி மற்றும் பாஜக கிளை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார் இவரது வீட்டின் அருகே வசிப்பவர் வேணு. சரவணன் என்பவர் தனது வீட்டிற்கு அருகில் வீட்டுமனை பட்டா நிலத்தில் உள்ள இரண்டு வீட்டுமனை வாங்கி உள்ளார்
வாய் தகராறு
இந்த வீட்டு மனையில் உள்ள சாலையை உள்ள வழியாகவே குப்பன் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி வீட்டு மனையின் பொது வழியை பாதையை வேணு சரவணன் டிராக்டர் மூலம் முழுவதையும் உழுதுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குப்பன், வீட்டு மனையில் உள்ள பொதுபாதையை ஏன் ஆக்கிரமிப்பு செய்கின்ற எனவும் பாதையை அமைப்பது தவறு என குப்பன் கேட்டுள்ளார். இதனால் குப்பனுக்கும், வேணும் மற்றும் சரவணனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
கட்டை கம்புகளால் தாக்குதல்
குப்பன் அவரது மனைவி பத்மாவதி மற்றும் பக்கத்து வீடான வேணு அவரது உறவினர்களான சரவணன்,சரவணன் என் தாயார் பூங்காவனம் முனியம்மாள் ஆகியோரிடையே வாய் தகராறு முற்றி இருதரப்பினரும் அங்கிருந்த கட்டை கம்புகளைக் கொண்டு மோதிக்கொண்டனர். இதனால் பலத்த காயமடைந்த குப்பன்,அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சையாக கொண்டு சென்று சேர்த்தனர்.
மரணம்
இதில் பலத்த காயத்துடன் மண்டை ஓடு உடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்து குப்பன் காலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் ரேவதி கொடுத்த புகாரின் பேரில் வேணுவின் உறவினரான சரவணனை மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இறந்த குப்பனை தாக்கிய வேணு, பூங்காவனம், முனியம்மாள் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.உடனடியாக வேணு பூங்காவனம் முனியம்மாள் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . வழி சம்பந்தமான தகராறில் ஒருவர் உயிரிழந்தது இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.y
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion