மேலும் அறிய
Advertisement
Crime: 'பிளான் நல்லா தான் இருந்துச்சு'... 'மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்' சிக்கிய திருடர்கள்
மறைமலை நகர் பகுதியில் செல்போன் திருடர்களை லாவகமாக மாற்றிவிட்ட இளைஞர்.
பொதுமக்கள் தொடர் புகார்
சென்னை புறநகர் பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகிறது. குறிப்பாக மறைமலைநகர், வண்டலூர், தாம்பரம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, காவல்துறையின் மூலம் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறை விசாரணை
மறைமலைநகர் மற்றும் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் இளைஞர்கள் பலர், தங்கி வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி அருகே தனியார் குடியிருப்பில், வசித்து வருபவர் பிரபுதேவா இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பிரபுதேவா தான் தங்கியிருந்த வீட்டில், வழக்கம்போல் தனது இரவு தூங்க சென்றுள்ளார் . இந்நிலையில் இரவு திடீரென , எழுந்து பார்த்த பொழுது , தனது கைபேசி மற்றும் மொபைல் டேப் காணாமல் இருப்பதைக் கண்டு உள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக தனது நண்பர்களுடன் மறைமலை நகர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உடனடியாக "மொபைல் லொகேஷன்" மூலம் தொலைந்த செல்போன்களை தேட முயற்சி செய்துள்ளார். அப்போது, பிரபுதேவா, தனது மொபைலில் "ஃபைண்ட் மை டிவைஸ்" என்கிற ஆப்ஷன் இருப்பதாகவும், இதில் செல்போன் திருடியவர்களின் லொகேஷன் துல்லியமாக காட்டும் எனவும் காவல் நிலையத்தில் கூறியுள்ளார். அதன் மூலம் லொகேஷனை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உடனே லொகேஷனுக்கு புறப்பட்டுச் சென்ற பிரபுதேவா மற்றும் காவலர்கள், மறைமலைநகர் போர்ட் அருகே ஃபோர்டு அருகே வீட்டின் மாடியில் தங்கி இருந்த மூன்று பேர்களை பிடித்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணான பதில்களை சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் அளித்துள்ளனர்.
கைது செய்த காவல்துறையினர்
இதனை அடுத்து 3 இளைஞர்கள் தங்கி இருந்த அறையை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில், 10 செல்போன்கள் லேப்டாக்கள் மற்றும் டேப்லெட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சார்பட்டா என்கிற சபரி வயது (20), முத்துக்குமார் (18) , விக்கி (21) ஆகிய மூன்று பேர் என தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரையும் கைது செய்த மறைமலைநகர் போலீசார் அவர்களிடம் இருந்து, 10 செல்போன்கள் ஒரு லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டு, குற்றவாளி பிடிக்க உதவிய இளைஞருக்கு காவல்துறையினர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion