மேலும் அறிய

Sukesh Chandrashekhar : விசாரணை அதிகாரியாக நடித்த சுகேஷ் சந்திரசேகர்...மற்றொரு தில்லுமுல்லு அம்பலம்

சிறையில் உள்ள 80க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகள், சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும், சிறைக்குள் இருந்து கொண்டு அவர் சட்டவிரோதமாக வியாபாரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகர், விசாரணை அதிகாரியாக நடித்து, குற்ற வழக்குகளிலிருந்து தப்பிக்க வைப்பதாகக் கூறி பண பறித்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

2019 இல் தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கில் டெல்லியைச் சேர்ந்த சஞ்சய் சிக்கன் என்ற சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளியின் பெயரையும் சிபிஐ சேர்த்துள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு சுற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 2020 - ஜனவரி 2021 என்ற ஒரு மாத இடைவெளியில்தான் நடிகை ஜாக்குலினிடம் சுகேஷ் பழக்கத்தை தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் சுகேஷ் யார் எனத் தெரியாததால் ஜாக்குலின் அவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். 

பின்னர் ஜாக்குலினின் மேக்கப் ஆர்டிஸ்ட் மூலம் சுகேஷ் காய் நகர்த்தி ஜாக்குலினிடம் அறிமுகம் ஆகியுள்ளார். தன்னை சேகர் ரத்னா வேலா என்ற அறிமுகத்துடன் ஜாக்குலிடம் நெருக்கம் காட்டியுள்ளார் சுகேஷ். பின்னர் தன்னுடைய பரிசுப்பொருட்கள் மூலம் ஜாக்குலினை திக்குமுக்காட வைத்துள்ளார். 

விசாரணையில் ஜாக்குலின் சொன்ன தகவலின்படி, இரண்டு ஜோடி வைர கம்மல்கள், விலை உயர்ந்த ப்ரேஸ்லட், விலை உயர்ந்த 3 கைப்பைகள், ஒரு ஜோடி ஷூ உள்ளிட்டவை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி பிரத்யேக gucci பிராண்ட் ஜிம் உடைகள் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சுகேஷ் கொடுத்த தகவலின்படி, 15 ஜோடிக்கும் அதிகமான காதணிகள், 5 கைப்பைகள், பல முன்னணி நிறுவனத்திடம் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் கொடுத்தேன் என்றும் சுகேஷ் கூறியுள்ளார்.

ஆபரணங்கள் மட்டுமின்றி ரோலக்ஸ் கடிகாரங்கள் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மொத்தமாக ரூ.7 கோடிக்கு ஆபரணங்கள் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் மினி கூப்பர் கார் ஒன்றையும் கொடுத்ததாகவும், நடிகை அதனை திருப்பி கொடுத்ததாகவும்தகவல் வெளியாகியுள்ளது. 

பெரிய பெரிய ஷோ ரூம்களுக்கு செல்லும் ஜாக்குலின் அங்கு அவருக்கு பிடித்த பொருட்களை டிக் செய்து சுகேஷுக்கு அனுப்பி வைப்பாராம். அந்த பொருளுக்கு பணம் செலுத்தப்பட்டு நேரடியாக ஜாக்குலிடம் வந்து சேருமாம். இதுவே வழக்கமாகவும் இருந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்காக போட்டாப் போட்டி நடந்து கொண்டிருந்தது. இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

டெல்லி ரோகினி சிறையில் உள்ள 80க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகள், சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும், சிறைக்குள் இருந்து கொண்டு அவர் சட்டவிரோதமாக வியாபாரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget