மேலும் அறிய
Advertisement
கணவரை பிரிந்த இளம்பெண் காதலனை போட்டுத்தள்ளிய கொடூரம்! 2-வது காதலனுடன் சேர்ந்து வெறிச்செயல்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் கள்ளக்காதலனை கொலை செய்த கொடூர இளம் பெண்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பெயர் பிரியா. நாகராஜ் கட்டிட வேலைகள் செய்து வருகிறார். நாகராஜ் மற்றும் பிரியா தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நாகராஜ் மனைவி பிரியாவிற்கு கோபாலகிருஷ்ணன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் திருமணம் கடந்த உறவாக மாறி உள்ளது. கோபாலகிருஷ்ணன் அதே பகுதியில், பார்சல்கள் டெலிவரி வேலை செய்யும் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். பிரியா மற்றும் கோபாலகிருஷ்ணன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவ்வப்பொழுது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், வேலை விஷயமாக, கோபாலகிருஷ்ணன் அடிக்கடி வெளியூர்களுக்கு செல்ல நேர்ந்துள்ளது. இதனால், முன்பு போல, பிரியாவை சந்திப்பதை கடந்த சில மாதங்களாக தவிர்த்து வந்துள்ளார்.
ரவுடி நட்பு
இந்த நிலையில் பிரியாவிற்கு சென்னை சேத்பட் பகுதியை சேர்ந்த ரவுடியான ஜில்லா என்கிற ஆனந்தன் என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இந்த விஷயம், கோபாலகிருஷ்ணனுக்கு தெரியவந்ததுமே, பிரியாவை போனில் அழைத்து கண்டித்துள்ளார். என்னைத் தவிர வேறு யாரிடமும் பழக வேண்டாம் எனவும் கோபாலகிருஷ்ணன் எச்சரிக்கை செய்ததாக கூறப்படுகிறது.
கோபாலகிருஷ்ணனை கொலை செய்ய திட்டம்
ஆனால், பிரியா அதை காதில் வாங்காமல், ஆனந்தனுடன் உறவை வளர்த்து வந்துள்ளார். இதனால் மனம் நொந்து போன கோபாலகிருஷ்ணன், பிரியாவுக்கு தொடர்ந்து நேரில் பார்த்தும் தொலைபேசி மூலமும் பழக்கத்தை கைவிடுமாறு தெரிவித்து வந்துள்ளார். இதில் எரிச்சலடைந்த பிரியா, ரவுடி ஆனந்திடம் சென்று, கோபாலகிருஷ்ணனை கொலை செய்யும்படி கூறியிருக்கிறார்.
புளியந்தோப்புக்கு வருமாறு
இதையடுத்து, சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 4 கூலிப்படையினரிடம் பேரம் பேசப்பட்டது. கோபாலகிருஷ்ணனுக்கு போனை போட்டு, புளியந்தோப்புக்கு வருமாறு அழைத்திருக்கிறார் பிரியா. ஆசைவார்த்தைகளை சொல்லி பிரியா அழைக்கவும, கோபாலகிருஷ்ணனும் வந்துள்ளார். அப்போது, கூலிப்படையினர் 4 பேரும், கோபாலகிருஷ்ணனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளனர். பிரியாவும் அரிவாளால் கோபாலகிருஷ்ணனை வெட்டியிருக்கிறார். பிறகு 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கோபாலகிருஷ்ணன் பிணத்தை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சந்தேகம் பிரியாவின் மீது
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கினர். கோபாலகிருஷ்ணனின் தொலைபேசியை கைப்பற்றி போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில், பிரியா என்பவருக்கு அழைப்பு சென்று இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு உள்ளனர். செல்போன் டவர் உதவியுடன் பார்த்த பொழுது இரண்டு செல்போன்களும் அதே பகுதியில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால், சந்தேகம் பிரியாவின் மீது திரும்பி உள்ளது. இதன் அடுத்து காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டனர். இந்தநிலையில் காரில் லிப்ட் கேட்டு பிரியா அங்கிருந்து தப்பி இருக்கிறார். அப்பொழுது பிரியா கொலை செய்த கத்தியை தன்னுடன் வைத்திருந்திருக்கிறார். இந்தநிலையில் புழல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த பொழுது காரைமடைக்கு சோதனை செய்ததில் பிரியா கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். இதன் அடுத்து பிரியாவை கைது செய்து மீதமுள்ள கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion