மேலும் அறிய

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையில் மது போதையில் உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த 2 இளைஞர்கள் கைது.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் ஒரு இயக்கத்தில் மாவட்ட துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜோதிமணி (28) என்ற மனைவியும், ஜீவிதா (5) என்ற மகளும் உள்ளனர். திருநாவுக்கரசு ஆங்கூர்பாளையம் சாலையில் டி.டி.வி. தினகரன் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடத்தை மகளிர் குழு மூலம் குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வந்தார்.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்தநிலையில் நேற்று இரவு கட்டண கழிப்பிடம் அருகே திருநாவுக்கரசு கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை கழிப்பறைக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த திருநாவுக்கரசு உடலை போலீசார் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் உமாதேவி கம்பம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து திருநாவுக்கரசின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்த கொலை தொடர்பாக கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டி.டி.வி. தினகரன் நகரை சேர்ந்த பிரகாஷ், கார்த்திக் என்ற 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொலை செய்யப்பட்ட நபரின் கூடவே பல நாட்களாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலை  செய்த பிரகாஷ் , கார்த்திக் என்ற இரண்டு பேரும் மது போதை ,கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் எனவும் கூறப்படுகிறது.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்த இரண்டு பேரும் கொலை செய்யப்பட்ட திருநாவுக்கரசு குத்தகைக்கு எடுத்துள்ள கழிப்பிடத்தில் அடிக்கடி மது அருந்தி வந்ததாகவும் கழிப்பிட வளாகத்தில் மது அருந்தக்கூடாது என கூறியபோது மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட பின்புதான் பிரகாஷ் மற்றும் கார்த்தி இருவரும் திருநாவுக்கரசை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.  கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்பவர் கம்பத்தை சேர்ந்தவர் என்றும் , கார்த்தி என்பவர் மதுரை சேர்ந்தவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் கம்பம் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த இருவரும் திருநாவுக்கரசுடன் கூட்டாக இருந்து வந்த நிலையில் போதை பழக்கத்தால் உடனிருந்தவரை கொலை செய்யும் அளவுக்கு போதை பழக்கம் கண்ணை மறைத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Embed widget