மேலும் அறிய

Crime: நள்ளிரவு 12 மணிக்கு மேல் கொள்ளை.. தீயிட்டு கொளுத்தப்பட்ட ஆதாரங்கள்... தீவிர விசாரணையில் போலீஸ்!

காவல்துறை நடத்திய விசாரணையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக கருதப்படும் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இதனால் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் உள்ளூர் மக்களின் பயன்பாடு போன்ற செயல்களால் எப்போதும் திருவண்ணாமலை பரபரப்பாகவே இருக்கும். இதனிடையே இங்குள்ள மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்குள் நேற்று இரவு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பியுள்ளனர். மேலும் கேஸ் வெல்டிங் பயன்படுத்தியதால் இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்து ஏடிஎம் மையத்திற்கு வந்த திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசார் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தினர். 

இதற்கிடையில் தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம் ஒன்றில்  மர்மநபர்கள் புகுந்து மிஷினில் இருந்த ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை திருடி சென்றுள்ளனர். 

4 ஏடிஎம்மில் கொள்ளை

இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.56 லட்சம் பணம் கொள்ளை போயுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரடியாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4  ஏடிஎம் மையத்தில் நேரங்களில் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து லட்சக்கணக்கான ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு 12 மணிக்கு கொள்ளை: 

காவல்துறை நடத்திய விசாரணையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்றும் திருவண்ணாமலை நகரில் சிசி டிவி கேமராவில் ஆந்திர பதிவின் கொண்ட டாடா சுமோ வாகனத்தில் கொள்ளையர்கள் வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.


தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎமில் முதலில் கொள்ளை அடித்துக் கொண்டு பின்னர் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தெரு ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஐ கொள்ளை அடித்து கொண்டு பின்னர் ஆந்திரா தப்பி செல்லும் வழியில் கலசப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரம் மற்றும் போளூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையம் கொள்ளை அடித்து கண்ணமங்கலம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணை:

இந்த மாநில கொள்ளையர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர். ஏடிஎம்  அருகே உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை அழிப்பதற்காகவே வெல்டிங் இயந்திரத்தில் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள் 4 ஏ டி எம் மையத்தையும் ஆதாரங்களை அழிக்கும் நோக்கோடு வெல்டிங் நெருப்பைக் கொண்டு தீயிட்டு கொளுத்தி உள்ளனர் குறிப்பாக சிசிடிவி காட்சிகள் பதிவாகவும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை தீயிட்டு கொளுத்தி அளித்துள்ளது தெரியவந்துள்ளது
மேலும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா திருவண்ணாமலை எல்லையில் உள்ள சுங்கச்சாவடி மையத்தில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார். நள்ளிரவில் நான்கு ஏ டி எம் மையங்களை குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஐ குறி வைத்து கொள்ளையடித்த சம்பவம் எதிரொலியாக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி திருவண்ணாமலைக்கு வருகை தந்து காவல்துறை உயர் அதிகாரி உடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தலைப்பு செய்திகள்

Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget