Watch Video: ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது எப்படி? வைரல் வீடியோ உள்ளே..!
KT Rajendra Balaji Arrest Video : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. வேலைவாங்கித் தருவதாக ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பெறப்பட்டதைத் தொடர்ந்து அவரை தமிழக போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், அவர் கடந்த 19 தினங்களாக தமிழக போலீசாரின் கைகளில் சிக்காமல் பதுங்கியே இருந்தார். இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஒரு காரில் சென்று கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை போலீசார் கைது செய்தனர். அந்த வீடியோவை கீழே காணலாம்.
'முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சேஸ் செய்து தூக்கிய போலீஸ்’ கர்நாடாகவில் கைது செய்யப்பட்டார்..!#Rajendrabalaji | pic.twitter.com/Q48pVRKl6R
— Raja Shanmugasundaram (@SRajaJourno) January 5, 2022
காவி வேட்டை, டீ சர்ட்டுடன் கர்நாடகாவில் வலம் வந்த ராஜேந்திர பாலாஜியை போலீசார் கைது செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவரை தமிழ்நாடு போலீசார் தமிழகம் அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.