மேலும் அறிய

போலீஸ் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி வாகனம் மோதி பலி

தேனி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதி நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் பொன்னுச்சாமி  விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

திண்டுக்கலில் போலீஸ் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்ற நபர் விருதலைபட்டி என்ற கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இருவரும் அங்குள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனிடையே தேனி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதி நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் பொன்னுச்சாமி  விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணி செய்து வந்த தனிப்பிரிவு காவலர்  குமாரசாமி மற்றும் காவல்நிலைய எழுத்தாளர் முத்துக்குமார் ஆகிய இருவரும் பொன்னுசாமியை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.

அவரிடம் சோதனை செய்ததில் 15க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பொன்னுசாமியை விசாரணைக்காக இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்துள்ளார்கள். அப்போது அரவக்குறிச்சி தாலுகா மஞ்சுவெளி ஊராட்சிக்குட்பட்ட கடம்பன்குறிச்சி மற்றும் எல்லப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது பொன்னுச்சாமி இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் நூல் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்த இடம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மையப்பகுதியில் உள்ளதால் போலீசாருக்கு விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பின் சம்பவ இடம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்டது என தெரிய வந்ததால் பொன்னுசாமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி கலையரசி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது கணவர் பொன்னுசாமிக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை எனவும், அவர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கலையரசி கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஆர்.கோம்பையைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

தலைப்பு செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
விழுப்புரம் அருகே நள்ளிரவில் கொடூரம்: ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரவுடி
விழுப்புரம் அருகே நள்ளிரவில் கொடூரம்: ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரவுடி
என்னங்க இப்படி ஓடுது? அரசு பேருந்து LED திரையில் வந்த விசித்திர வாசகம்! வீடியோ வைரல்..!
என்னங்க இப்படி ஓடுது? அரசு பேருந்து LED திரையில் வந்த விசித்திர வாசகம்! வீடியோ வைரல்..!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
Embed widget