Cyber crime: டாஸ்கை முடிக்க சொல்லி டாட்டா காண்பித்த ஆன்லைன் மோசடி கும்பல் - ரூ. 3 லட்சத்தை இழந்த இன்ஜினியர்
புதுச்சேரி வேலராம்பட்டியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஆன்லைன் மோசடியில் மூன்று லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை இழந்தார்.
புதுச்சேரி வேலராம்பட்டியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் இன்று ஆன்லைன் மோசடியில் மூன்று லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை இழந்தார்..
ஆன்லைன் மோசடி :
புதுச்சேரி வெல்ராம் பட்டியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் அஸ்வந்த்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் அமேசான் கம்பெனியின் HR மேனேஜர் தொடர்பு கொள்கிறேன் என்று ஆன்லைனில் அதிக லாபம் தரும் வேலை வாய்ப்புகள் உள்ளது என்றும் மேலும் நீங்கள் எடுத்த உடனே அதிக முதலீடு செய்ய வேண்டாம் குறைந்த முதலீடு செய்யுங்கள் அதில் வருகின்ற லாபத்தை பார்த்து அதிக முதலீடு செய்யுங்கள் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பி அவர்கள் கொடுத்த டெலிகிராம் ஆப் மூலம் அனுப்பிய வங்கி கணக்குகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்திய உடன் அவர்கள் கொடுத்த டாஸ்கை முடித்த பிறகு 350 ரூபாய் சேர்த்து 1350 ரூபாய் அவருடைய அக்கவுண்டில் போடுகிறார்கள்.
அதை நம்பி பத்துக்கும் மேற்பட்ட தவணைகளில் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்திய பிறகு லாபத்தையும் சேர்த்து அவருடைய கணக்கில் 8 லட்சத்திற்கும் மேல் பணம் இருப்பதாக காட்டியதால், பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது வங்கி கணக்கில் பணம் இல்லை நாம் ஏமாந்து விட்டோம் என்று உணர்ந்து புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அது சம்பந்தமாக இணைய வழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி இணைய வழி போலீசார் எச்சரிக்கை
பொதுமக்களுக்கு புதுச்சேரி இணைய வழி போலீசார் விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால் பெரும்பாலான ஆன்லைனில் வருகின்ற முதலீடுகள் வேலைவாய்ப்புகள் குறைந்த விலையில் அதிக பொருட்கள் மேலும் விலை உயர்ந்த பொருட்களை மிக குறைந்த விலைக்கு கொடுக்கிறோம். ராணுவ வீரர் போல் நடித்து வெளியூருக்கு மாற்றல் வந்துவிட்டது. இவ்வளவு பொருட்களையும் நீண்ட தூரம் எடுத்துச் செல்ல முடியாது ஆகையால் என்னுடைய வீட்டில் உபயோகப்படுத்திய பொருட்கள் அனைத்தையும் குறைந்த விலைக்கு இங்கேயே கொடுத்து விட்டு செல்ல போகிறேன் போன்ற அனைத்துமே இணைய வழி மோசடிக்காரர்களால் பொதுமக்களின் பணத்தை கொள்ளை அடிக்க உருவாக்கப்பட்ட வழிகளாகும். மேற்கண்ட இதுபோன்ற வழிகளில் தான் பொதுமக்கள் நிறைய பணத்தை இழக்கிறார்கள் ஆகவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் மிகுந்த எச்சரிக்க இருக்கும்படி புதுச்சேரி இணை வழி போலீசார் எச்சரிக்கை செய்கின்றனர்.